Categories
அப்துல் ரகுமான் ஆசிரியர் குறிப்பு

புதுக்கவிதை – கவிக்கோ அப்துல் ரகுமான் வாழ்க்கை வரலாறு..

புதுக்கவிதை –  கவிஞர்  (அப்துல் ரகுமான் )


இயற்பெயர்: அப்துல் ரகுமான்

பிறந்த ஊர்: மதுரை கிழக்கு சந்தைப்பேட்டை

வாழ்ந்த காலம்: 09 – 11 – 1937 முதல் 02 – 06 – 2017

பெற்றோர் பெயர்கள்: மஹி என்னும் (சையத் அகமத்)  மற்றும் ஜைனத் பேகம் 

 

வேறு பெயர்கள்: 

அருள் வண்ணண், விண்மீன்கள் இடையே ஒரு முழு மதி, தமிழ்நாட்டில் இக்பால், வானத்தை வென்ற கவிஞன், சூரியக் கவிஞன், மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்.

 

கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய முக்கிய குறிப்புகள்: 

1. “கவிக்கோ” என்று சிறப்பாக குறிப்பிடப்படுபவர் கவிஞர் அப்துல் ரகுமான்.

2. வானம்பாடி இயக்கக் கவிஞர்களோடு இணைந்து செயலாற்றியவர்.

3. வாழும் கவிஞரான இவர் மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என்று பாராட்டபடுகிறார்கள்.

4. தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார்.

5. தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிற மொழி இலக்கியங்களை முனைந்து செயல்பட்டதிலும், பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர்.

6. வாணியம்பாடி இஸ்லாமியக் கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

7. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய “தமிழ்நாடு” எனும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராக சிலகாலம் பணியாற்றினார்.

8. “தொன்மம்” என்ற இலக்கிய உத்தியை அதிகமாக கையாண்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார்.

9. “கவிக்கோ” எனும் இதழை நடத்தியவர் இவர்தான்.

 

கவிக்கோ அப்துல் ரகுமானின் தன் வாழ்நாள் கல்வி பயணம்:

* மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார்.

* தொடர்ந்து அக்கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* மா. ராசமாணிக்கனார், அவ்வை துரைசாமி, ஆ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், ஆர். பரமசிவானந்தம் ஆகிய தமிழர் அறிஞர்களிடம் பயின்றார்.

* வக்பு வாரிய தலைவராக (தமிழ்நாடு) 2009 முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.

 

கவிஞர் அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்:

1. 1989 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் “தமிழன்னை விருது” வழங்கியது.

2. 1989 தமிழக அரசு “பாரதிதாசன் விருது” வழங்கிப் பெருமைப்படுத்தியது.

3. 1989 இல் தமிழக அரசு “கலைமாமணி விருது” வழங்கியது.

4. 1996இல் சிற்பி அறக்கட்டளை விருது பெற்றார்.

5. 1999 “ஆலாபனை” என்றும் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

6. 2007இல் “கம்பன் விருது” பெற்றுள்ளார்.

7. 2008 இல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் “உமறுப்புலவர் விருது” பெற்றுள்ளார்.

8. சிலேடைகளாக  கவிதை தந்து சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான் ஆவார்.

 

கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய நூல்கள்:

1. பால்வீதி (அப்துல் ரகுமான் எழுதிய முதல் கவிதை) 

2. நிலவில் இருந்து வந்தவன்

3. அவளுக்கு நிலா என்று பெயர்

4. சுட்டுவிரல்

5. தீபங்கள் எரியட்டும்

6. பித்தன்

7. முட்டை வாசிகள்

8. கடவுளின் முகவரி

9. தொலைபேசி கண்ணீர்

10. மின்மினிகளால் ஒரு கடிதம்

11. கரைகள் ஓர் நதியாவதில்லை 

12. இன்றிரவு பகலில்

13. சலவை மொட்டு

14. விலங்குகள் இல்லாத கவிதை

15. காக்கைச் சோறு

16. பசி எந்த சாதி

17. இது சிறகுகளின் நேரம்

18. சொந்த சிறைகள்

19. கால வழு

20. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை

21. ரகசியப் பூ

22. மகரந்த சிறகு

23. விதையில் விழுந்தவன்

24. நேயர் விருப்பம்

25. ஆலாபனை (சாகித்திய அகடமி விருது பெற்றது)

26. நெருப்பை அணைக்கும் நெருப்பு

27. முத்தங்கள் ஓய்வதில்லை

28. உன் கண்ணில் தூங்கிக் கொள்கிறேன்

29. மரணம் முற்றுப்புள்ளி அல்ல

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *