Categories
Uncategorized

புதுக்கவிதை – ஈரோடு தமிழன்பன் TNPSC group 4 exam material….

 புதுக்கவிதை –  கவிஞர்(ஈரோடு தமிழன்பன்)


இயற்பெயர்: ஜெகதீசன்

பெற்றோர்கள்: நடராஜன் மற்றும் வள்ளியம்மாள்

 பிறந்த ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)

பிறந்த வருடம்: 28 – 09 – 1940

புனைப்பெயர்: விடிவெள்ளி

சிறப்பு பெயர்: மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர். 

 

ஈரோடு தமிழன்பன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

2. தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

3. 1972 ஆம் ஆண்டு தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் கலைமாமணி விருது பெற்றவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

4. மரபுக் கவிதை எழுதி புதுக்கவிதைக்கு வந்த தமிழ் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

5. தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் phd பட்டம் பெற்றவர்.

6. சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

7. இவர் ஒரு “வானம்பாடி கவிஞர்” என்று அழைக்கப்படுகிறார்.

8. “ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்க கவிஞர்” ஈரோடு தமிழன்பன் ஆவார்.

9. “கவியரங்க கவிஞர்” என்று அழைக்கப்படுபவர் ஈரோடு தமிழன்பன்.

10. இவர் “பாரதிதாசன் பரம்பரை கவிஞர்” ஆவார்.

11. இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

12. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனும் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை கொடுத்துள்ளார்.

13. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

14. “வணக்கம் வள்ளுவ” எனும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகடமி விருது 2004ஆம் ஆண்டில் பெற்றார்.

15. தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

16. “அரிமா நோக்கு என்ற ஆய்வு இதழின்” ஆசிரியர் தமிழன்பன் ஆவார்.

17. மரபுக்கவிதை புதுக்கவிதை திறனாய்வு படைப்பதில் வல்லவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

 

ஈரோடு தமிழன்பன் எழுதிய நூல்கள்:

1. தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)

2. சூரிய பிறை

3. ஊமை வெயில்

4. ஒரு வண்டி சென்ரியு 

5. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்

6. நிலா வரும் நேரம்

7. தீவுகள் கரையேறுகின்றன

8. காலத்திற்கு ஒரு நாள் முந்தி

9. தோணி வருகிறது (முதல் கவிதை நூல்)

10. சிலிர்ப்புகள்

11. விடியல் விழுதுகள்

12. திரும்பி வந்த தேர்வலம்

13. மின்மினி காடுகள்

14. சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்

15. பொதுவுடமை பூபாளம் 

16. வணக்கம் வள்ளுவ

 

ஈரோடு தமிழன்பன் பற்றிய முக்கிய மேற்கோள்கள்:

* ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை என்று கூறியவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

* “சதை திரண்டு உன் வார்த்தைகளின் வீரம் கலகலத்து ஓடுகிறது” எங்கள் உள்ளங்களில் என்று கூறியவர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.

 

ஈரோடு தமிழன்பன் ஒரு பன்முக படைப்பாளி என்பதற்கான சான்று:

தமிழக கவிஞர், ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்க கவிஞர், புதுக்கவிதை கவிஞர், சிறுகதை ஆசிரியர் , புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கிய படைப்பாளி, வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக ஆளுமைகளை கொண்டவர்தான் ஈரோடு தமிழன்பன். 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *