Categories
Uncategorized

புதுக்கவிதைக் கவிஞர் சிற்பி Tnpsc பொதுத்தமிழ் group 4 exam material …

 புதுக்கவிதை – கவிஞர் சிற்பி(பாலசுப்ரமணியம்)

 


கவிஞர் சிற்பியின் இயற்பெயர்: நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி 

கவிஞர் சிற்பி பிறந்த ஊர்: ஆத்துப்பொள்ளாச்சி (கோவை மாவட்டம்) 

கவிஞர் சிற்பியின் பெற்றோர்கள்: பொன்னுசாமி கவுண்டர் மற்றும் கண்டியம்மாள் 

கவிஞர் சிற்பியின் காலம் : 29 – 07 – 1936 

 

கவிஞர் சிற்பி பற்றிய முக்கிய குறிப்புகள்:

* கவிஞர் சிற்பி கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்கு பொறுப்பாளர் சாகித்திய அகடமி ஒருங்கிணைப்பாளர்  

* கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல் ஓவியர்.

* சொல்லை  தேர்ந்து செதுக்கி தமிழ் பாடல் ஆக்கும் வல்லமை கொண்டவர்.

* கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 

* 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார். 

* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ (தமிழ் இலக்கியம்) கற்று 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். 

* 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

* லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை “அக்னிசாட்சி” எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் கவிஞர் சிற்பி. 

* இந்நூல் 2000  ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றது.

* மேலும் “ஒரு கிராமத்து நதி கரையில்” எனும் நூலுக்கு 2002ல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது.

* தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகடமி விருது பெற்ற பெருமை கவிஞர்  சிற்பிக்கு மட்டுமே சேரும். 

 

சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்ற விருதுகள்:

1. மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்க்காகவும்  இருமுறை சாகித்ய அகடமி விருது பெற்றவர் கவிஞர் சிற்பி.

2. தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர்.

3. குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மகாகவி உள்ளூர் விருதும் பெற்றார். 

4. மூத்த எழுத்தாளர் களுக்காக லில்லி தேவசிகாமணி விருது என பல விருதுகள்.

5. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசு போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்.

6. கவிஞர்கோ எனும் பட்டம் குன்றகுடி அடிகளர்களால் கவிஞர் சிற்பிற்கு வழங்கப்பட்டது. 

 

கவிஞர் சிற்பியின் அறக்கட்டளை:

1996 இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு  ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் பரிசுகள் அளித்து வருகிறது. 

 

கவிஞர் சிற்பியின் கவிதை நூல்கள்:

1. ஒரு கிராமத்து நதி 1998 (சாகித்திய அகடமி விருது பெற்றது 2002 ஆம் ஆண்டு)

2. சிற்பியின் கவிதை வானம்

3. நிலவுப்பூ

4. சிரித்த முத்துக்கள்

5. ஒளிப்பறவை (தளை)

6. புன்னை பூக்கும் பூனைகள்

7. நீலக்குருவி 

8. இறகு

9. மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது)

10. சூரிய நிழல் 

11. பெருமூச்சுக்களின் பள்ளத்தாக்கு

12. சர்ப்பயகம் 

13. தேவயானி 

14. மூடுபனி

15. பூஜ்யங்களின் சங்கிலி ( தமிழக அரசு பரிசு பெற்றது 1999)

16. பாரதி கைதி எண் – 253

17. மகாத்மா

18. ஆதிரை (கவிதை நாடக நூல்)

19. அக்னி சாட்சி

20. சிற்பி கவிதைகள் தொகுதி – 2 

 

கவிஞர் சிற்பி எழுதிய உரைநடை நூல்கள்:

1. மகாகவி

2. இலக்கிய சிந்தனைகள்

3. மலையாளக் கவிதை

4. சிற்பியின் கட்டுரைகள்

5. படைப்பும் பார்வையும் 

6. புதிர் எதிர்காலம்

7. மனம் புகும் சொற்கள்

8. கவிதை நேரங்கள் 

9. காற்று வரைந்த ஓவியம்

10. மின்னல் கீற்று

11. நேற்றுப் பெய்த மழை

12. அலையும் சுவடும்

13. இல்லறம் நல்லறம் 

 

கவிஞர் சிற்பி எழுதிய சிறுவர் நூல்கள்:

1. சிற்பி தரும் ஆத்திசூடி

2. வண்ணப்பூக்கள்

 

கவிஞர் சிற்பி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

1. ராமானுஜர் வரலாறு

2. ம. ப. பெரியசாமி தூரன்

3. பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் 

4. ஆர். சண்முகசுந்தரம்

5. சே.பா. நரசிம்மலு நாயுடு

6. மகாகவி பாரதியார்

7. நம்மாழ்வார்

8. தொண்டில் கனிந்த தூரன்

 

கவிஞர் சிற்பியின் மொழிபெயர்ப்பு நூல்கள்:

1. சச்சிதானந்தன் கவிதைகள்

2. கவிதை மீண்டும் வரும்

3. காலத்தை உறங்க விடமாட்டேன் 

4. கே.ஜி சங்கரப்பிள்ளை கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *