Categories
Uncategorized

“தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா” – மு. வரதராசனார் வாழ்க்கை வரலாறு….

 தமிழ் கடித இலக்கியம் –                மு. வரதராசனாரின் கடிதம் 

 


இயற்பெயர்:
திருவேங்கடம்

பெற்றோர்கள்: முனுசாமி முதலியார் மற்றும் அம்மாக்கண்ணு

வாழ்ந்த காலம்: 25 – 04 – 1912 முதல் 10 – 10 – 1974 

பிறந்த இடம்:  வேலூர் மாவட்டத்திலுள்ள( தற்போது ராணிப்பேட் மாவட்டத்தில்)  வாலாஜாபேட்டையில் (வேலம்) பிறந்தார்.

புனைப்பெயர்: மு. வரதராசனார்.

 

மு. வரதராசனார் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. மு. வரதராசனார் இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களில் ஒருவர் ஆவார்.

2. இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. மு. வரதராசனார் தன்னுடைய கல்வி படிப்பை வேலூர் (தற்போது ராணிப்பேட் மாவட்டம்) மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை அருகில் உள்ள வேலம் எனும் சிறிய கிராமத்தில் இருந்து வளர்ந்தது. 

4. உயர்நிலைக் கல்வியை திருப்பத்தூரில் கற்று தேர்ந்தார்.

5. 1935ஆம் ஆண்டு முதல் 1938ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

6. 1939இல் பீ. ஓ.எல் தேர்ச்சி பெற்றார்.

7. 1935 இல் தமிழ் புலவர்  மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.

8. 1939 முதல் 1944 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

9. 1945இல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10. 1944ஆம் ஆண்டு “தமிழ் வினைச்சொற்களின் தோற்றமும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் ஆராய்ந்து M.O.L பட்டம் பெற்றார்.

11. 1948 இல் சென்னை  பல்கலைக்கழகத்தின் மூலம் “சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

12. சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் முனைவர் பட்டம் (டாக்டர் பட்டம் ) பெற்றவர் மு. வரதராசனார் ஆவார்.

13. 1971இல் மதுரை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974ஆம் ஆண்டு வரை சிறப்புறப் பணியாற்றினார்.

14. 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவின் “ஊஸ்டர் கல்லூரி” இவருக்கு இலக்கியப் பேரறிஞர் ( டி. லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது.

15. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் (டி .லிட்) எனும் சிறப்பு பட்டம் பெற்ற முதல் தமிழ் அறிஞர் மு. வரதராசனார் ஆவர்.

16. உலகம் சுற்றும் முதல் தமிழ் பேராசிரியர் மு. வரதராசனார் ஆவார்.

17. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேர்வு ஆணைய குழுவிலும் மத்திய அரசு தேர்வு ஆணைக்கழு தலைவராகவும் பதவி வகித்தார்.

18. “தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா” என்று அழைக்கப்படுபவர்                              (மு. வரதராசனார்)மு. வரதராசனாரை அழைத்தவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.

19. “தென்னகத்தின் பெர்னாட்ஷா” என்று அழைக்கப்படுபவர்                 அறிஞர் அண்ணா ஆவார்.

 

மு. வரதராசனார் பெற்ற விருதுகள்:

1. மு. வரதராசனார் – ன் “அகல்விளக்கு” எனும் நாவலுக்கு 1961 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

2. கள்ளோ? காவியமோ?, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்கு தமிழக அரசின் விருது கிடைத்தது.

3. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ? காவியமோ?, அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச்செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன.

 

மு .வரதராசனார் – ன் நூல்கள்:

சிந்தனைக் கதை:

* பழியும் பாவமும் – இலக்கியம்

* தமிழ் நெஞ்சம்

* திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

* கண்ணகி

* மாதவி

* நெடுந்தொகை விருந்து

* நெடுந்தொகை செல்வம்

* குறுந்தொகை விருந்து

* குறுந்தொகை செல்வம்

* கொங்குதேர் வாழ்க்கை 

* நற்றிணை விருந்து

* நற்றிணை செல்வம்

* ஓவச்செய்தி.

 

மு. வரதராசனார் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

* அறிஞர் பெர்னாட்ஷா

* காந்தி அண்ணல்

* கவிஞர் தாகூர்

* திரு. வி. கல்யாணசுந்தரனார்.

 

மு . வரதராசனார் எழுதிய புதினம் (நாவல் நூல்கள்):

* செந்தாமரை (முதல் புதினம் – இது லோகேபகாரி இதழில் வெளிவந்தது)

* அல்லி

* மலர்விழி

* அகல்விளக்கு

* பச்சையப்பர்

* மனச்சான்று

* காதல் எங்கே ?

* கள்ளோ ? காவியமோ ? (இரண்டாவது புதினம்)

* கரித்துண்டு.

 

மு. வரதராசனார் எழுதிய சிந்தனை கட்டுரைகள்:

* அறமும் அரசியலும்

* அரசியல் அலைகள்.

 

மு .வரதராசனார் எழுதிய சிந்தனை கடிதங்கள்:

* அன்னைக்கு

* தம்பிக்கு

* தங்கைக்கு

* நண்பருக்கு

* மு. வ – வின் கடிதங்கள்.

 

மு. வரதராசனார் எழுதிய சிறுகதைகள்:

* குறட்டை ஒலி 

* விடுதலையா.

 

மு. வரதராசனார்  எழுதிய கடிதத்தில் இடம் பெறும் முக்கிய மேற்கோள்கள்:

* தமிழ் ஒன்றே தமிழரை பிணைந்து ஒற்றுமை படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் ஆனால் தவிர தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு.

* ஆட்சி மொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும்.

* கல்வி மொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாம்  பாடங்களிலும் தமிழிலே கற்பிக்க வேண்டும்.

* கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனை சீட்டு முதலியன தமிழில் எழுதுக என்று கூறியவர் மு. வரதராசனார் ஆவார்.

* திருமண வழிபாடு முதலியவற்றை தமிழில் நடத்து என்று கூறியவர் மு வரதராசனார் ஆவார்.

* ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் திருமூலர்.

* ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற செம்மொழியில் போற்று என்று கூறியவர் மு. வரதராசனார் ஆவார்.

* உன் மொழியையும், நாட்டையும் போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும், நாட்டையும் போற்றாதே; பறிக்காதே; வெறுக்காதே; அயலானின் தாய்மொழியை பறிக்காதே; வெறுக்காதே; 

* அயலானின் தாயை  பழித்து வெறுக்காமல் நம் தாயிடம் செலுத்தமுடியும் அத்தகைய அன்பு தான் நிலையானது; நீடிப்பது என்று கூறியவர்                          மு. வரதராசனார் ஆவார்.

* தமிழர்களிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களை செய்யாதே;  அத்தகைய சொற்களை சொல்லாதே; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே; தமிழர் இடையே ஒற்றுமை வளர்க்கும் சிந்தனை சொல் செயல்களையே போற்று.

* சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே. 

* சுவையற்று இருந்தாலும் பின்னவையைப் போற்று.

* கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நன்மைக்காக தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களை விட நாட்டு மக்களின் நன்மையை பெரிது என்று கூறியவர் மு வரதராசனார் ஆவார்.

* ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை என்று கூறியவர்                        மகாகவி பாரதியார்.

* ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை என்று பாரதியார் கண்ட கனவை போற்று என்று கூறியவர் மு. வரதராசனார்.

* யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியவர் கணியன் பூங்குன்றனார் ஆவார்.

* யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் நல்ல நிலை வரவேண்டும் என்று கூறியவர் மு. வரதராசனார் ஆவார்.

* தொண்டுக்கு முந்து; தலைமைக்கு பிந்து என்று கூறியவர்                                 மு. வரதராசனார்.

* அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை; அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது; என்று கூறியவர் சுவாமி விவேகானந்தர்.

* பொது நலத்திற்காக கட்டுப்படுதல், கீழ்படிதல், தொண்டு செய்தல் இவற்றை பெருமையாக கொள் என்று கூறியவர் மு. வரதராசனார் ஆவார்.

 

எழுவர் கொடுத்த கொடை:

1. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் – பாரி 

2. இரவலர்க்கு குதிரை கொடுத்தவர் – காரி

3. வந்தவர்க்கு ஊர் கொடுத்தவர் – ஆய்

4. புலவருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் – அதியமான்

5. இல்லறத்திற்கு பொருள் கொடுத்தவர் – நள்ளி 

6. கூத்தருக்கு நாடு கொடுத்தவர் – ஓரி

7. மயிலுக்குப் போர்வை கொடுத்தவர் – பேகன்.

 

மு. வரதராசனார் பற்றி மேலும் சில முக்கிய குறிப்புகள்:

1. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெருந்தலைவர் மு. வரதராசனார் ஆவார்.

2. வழக்கை தருவது இடைக்கைக்கு தெரியக்கூடாது என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் மு. வரதராசனார்.

3. இயல்வது கரவேல்; ஈவது விலக்கேல் என்று கூறியவர் ஓளவையார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *