Categories
Uncategorized

சுந்தர ராமசாமி (பசுவய்யா) Tnpsc group 4 வாழ்க்கை வரலாறு….

புதுக்கவிதை  – கவிஞர் (பசுவய்யா )


இயற்பெயர் : சுந்தர ராமசாமி

பிறப்பு: நாகர்கோயில் அருகே மகாதேவர் கோவிலில் 30. 5 .1931 இல் பிறந்தார்.

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) பற்றிய சில குறிப்புகள்:

1. நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார்.

2. இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். கவிஞர் என பல இலக்கிய வகை இலக்கியங்களில் ஆளுமை பெற்றிருந்தார்.

3. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.

4. “நவீன தமிழ் இலக்கியத்தில் தமிழ் மொழியினை” பல்வேறு தளங்களுக்கு கொன்று சென்றவர் பசுவய்யா.

5. மலையாள இலக்கிய சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.

6. பின்பு 1950இல் பொதுவுடமை தோழரான ஜீவானந்தம் அவர்களை சந்தித்துளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. புதுக்கவிதை வரலாற்றில் “ஒரு துருவ நட்சத்திரம்என்று அழைக்கப்படுபவர் பசுவய்யா.

 

பசுவய்யா பெற்ற விருதுகள்:

1. ஜே.ஜே  சில குறிப்புகள் எனம் நூலானது (ஆற்றூர் ரவிவர்மா – மலையாள மொழி பெயர்ப்பு)  1997 ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாவலாகும் .

2. குமரன் ஆசான் நினைவு விருது.

3. இயல்விருது, தமிழ் இலக்கிய தோற்றம் என்ற நூலுக்காக 2001இல் வாழ்நாள் சாதனைக்கான விருதினை பெற்றார்.

4. கதா சூடாமணி விருது 2004ஆம் ஆண்டு பெற்றார்.

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) அவர்களின் நினைவாக வழங்கப்படும் விருதுகள்:

1. தமிழ் கணிமை மற்றும் தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளை கௌரவிக்கும் முகமாக சுந்தரராமசாமி தமிழ் கணிமை விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பண உதவியுடன் வழங்கப்படுகிறது.

3. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதினை பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும்(1000 caneadiya dollar) விருது பட்டமும் வழங்கப்படும்.

4. இவ்விருதினை பெறுபவர் சுயேச்சையான  பன்னாட்டு நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

5. நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு சுந்தரராமசாமி விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் அளித்து வருகிறத.

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) இயற்றிய மொழிபெயர்ப்பு நூல்கள்:

1. செம்மீன் – தகழி சங்கரப்பிள்ளை எழுதியவர் (1962)

2. தோட்டியின் மகன் – தகழி சங்கரப்பிள்ளை எழுதியது (2000)

3. தொலைவிலிருக்கும் கவிதைகள் (2004)

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) இயற்றிய வேறு நூல்கள்:

1. கோவில் காளையும் உழவு மாடும்

2. கிடாரி

3. அக்கறை சீமையில்

4. ஒரு புளியமரத்தின் கதை

5. குழந்தைகள் பெண்கள் – ஆண்கள்

6. ஜே. ஜே சில குறிப்புகள்

7. டால்ஸ்டாய் தாத்தாவின் கதை

8. பல்லக்கு தூக்கிகள்

9. முதலும் முடிவும்

10. முட்டை காரி

11. தோட்டியின் மகன்

12. பொறுக்கி வர்க்கம்

13. தண்ணீர் 

14. முதலும் முடிவும் (முதல் சிறுகதை)

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) கவிதைகள்:

1. நடுநிசி நாய்கள்

2. யாரோ ஒருவனுக்காக

3. 107 கவிதைகள் எனும் பெயரிலும் வெளிவந்துள்ளன.

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) கட்டுரை நூல்கள்:

1. ஆளுமைகள் மதிப்பீடுகள்

2. வாழும் கணங்கள்

3. காற்றில் கரைந்த பேராசை

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) பணியாற்றிய இதழ்கள்:

1. மார்க்சிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவர் ஆக இருந்து தொ. மூ. சி ஆசிரியராக இருந்து “சாந்தி” எனும் பத்திரிகையில் எழுத தொடங்கினார்.

2. “சரஸ்வதிஎனும் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராக இருந்தார். அதன் பின்னர் அவர் எழுத்தாளராக வளர உதவியது. 

3. 1953 ஆம் ஆண்டு இவர் எழுதிய “தண்ணீர்” கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 

 

சுந்தர ராமசாமி (பசுவய்யா) மறைவு:

அமெரிக்காவில் இருந்த சுந்தர ராமசாமி தன்னுடைய 74 ஆம் வயதில் கலிபோர்னியா மாகாணத்தில் 14.10.2005 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *