Categories
இரா. மீனாட்சி கவிதைகள்

இரா. மீனாட்சி – புதுக்கவிதை – சிறப்புச் செய்திகள்..

புதுக்கவிதை – கவிஞர் (இரா. மீனாட்சி )


பிறப்பு : 1941

பிறந்த ஊர்: திருவாரூர்

பெற்றோர்கள்: ராமச்சந்திரன் (தந்தை) – மதுரம் (தாய்)

மீனாட்சியின் வேறு பெயர்:

ராமச்சந்திரன் அல்லது மீனாட்சி என அழைக்கப்படுகிறார்.

 

இரா. மீனாட்சி பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. கவிஞர் இரா. மீனாட்சி ஒரு தமிழ் கவிஞர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.

2. நவீன தமிழ் இலக்கியத்தில் புதுக்கவிதைப் படைப்பில் குறிப்பிடத்தக்கவர் என்பது நினைவுக்கு வருகிறது.

3. சி. சு. செல்லப்பாவின் “எழுத்து” காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி.

4. தற்போது ஆரோவில் சர்வதேச நகரத்தில தொண்டாற்றி வருகிறார்.

5. இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

6. கவிஞர் இரா. மீனாட்சி எழுதிய “செம்மண் மடல்கள்” எனும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது.

7. மேலும் இவர் சிறந்த சித்த மருத்துவ சேவைக்காக ஸ்ரீபுத்தூ மகரிஷி அறக்கட்டளை வழங்கிய “சித்த மருத்துவ சேவை செம்மல்” எனும் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரா. மீனாட்சி எழுதிய கவிதை நூல்கள்:

1. உதய நகரிலிருந்து (2006)

2. மீனாட்சி கவிதைகள் (2002)

3. தீபாவளி பகல் (1983)

4. செம்மண் மடல்கள்(தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது)

5. சுடு பூக்கள் (1978)

6. மறு பயணம் (1998)

7. வாசனைப்புல் (2006)

8. கொடி விளக்கு (2009)

9. நெருஞ்சி (1970)

10. ஆங்கில படைப்பு 

11. ஓவியா (2009)

12. இந்திய பெண்கவிகள் பேசுகிறார்கள்.

 

கவிஞர் இரா. மீனாட்சி எழுதிய தொகுப்பு நூல்கள்:

1. கொங்குதேர் வாழ்க்கை

2. பறத்தல் அதன் சுதந்திரம்

3. சிற்றகல் 

 

கவிஞர் இரா. மீனாட்சி பெற்ற விருதுகள்:

1. சிற்பி இலக்கிய விருது (2005)

2. புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது (2007)

3. “உதய நகரிலிருந்துஎன்ற புதுக் கவிதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது (2006)

4. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (2007)

5. புதுவை பாரதி விருது (2010)

6. கவிக்கோ விருது (2010)

 

தற்போது இரா. மீனாட்சி அவர்கள் சாகித்திய அகாடம ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார்…..

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *