மரபுக்கவிதை – வாணிதாசன் :
தோற்றம்: 22-07-1915 மறைவு: 07-08-1974
1. வாணிதாசன் வாழ்க்கை குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள வில்லியனூரில் ,22-07-1915 ஆம் ஆண்டுு தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அரங்க. திருகாமு மற்றும் துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் தான் கவிஞர் வாணிதாசன். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. மேலும் இவர் “”ரமி”” என்ற புனைப் பெயர் கொண்டவர்.
* வாணிதாசன் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பெற்றவர்
* வாணிதாசனின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ் கவிதை களஞ்சியம்” என்ற நூலிலும் , தென் மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுத்தமிழ் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
* வாணிதாசன் “தமிழ் பிரெஞ்சு கையகர முதலி ” என்ற நூலை வெளியிட்டார்.
* பிரெஞ்சுக் குடியரசு தலைவர் இவருக்கு “செவ்வா லியர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது”
* வாணிதாசனின் முதல் பாடல் பாரதி நாள்.
2. வாணிதாசனின் சிறப்பு பெயர்கள்:
* புதுமைக் கவிஞர்
* பாவலரேறு
* பாவலர் மணி
* தமிழ்நாட்டுத் தாகூர் ( மயிலை சிவமுத்து)
* தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்
3. வாணிதாசன் இயற்றிய நூல்கள்:
* தமிழச்சி
* கொடி முல்லை
* எழிலோவியம்
* தீர்த்த யாத்திரை
* இன்ப இலக்கியம்
* பொங்கல் பரிசு
* இரவு வரவில்லை
* சிரித்த நுணா
* வாணிதாசன் கவிதைகள்
* பட்டாரங்கா பாடல்கள்
* இனிக்கும் பாட்டு
* தொடுவானம்
* பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு கிடைத்தது)
* பெரிய இடத்துச் செய்தி
* பொங்கல் பரிசு
* வாணிதாசன் கவிதைகள் முதல் தொகுதி
* வாணிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி
* வாணிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி
4. வாணிதாசனின் புனைப்பெயர்:
ரமி
5. வாணிதாசன் பற்றிய சிறப்பு :
* பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
* பாவேந்தர் பாரதிதாசன் பரிசு பெற்றவர்
* மயிலை சிவமுத்து வால் தமிழ்நாட்டின் தாகூர் என அழைக்கப்பட்டார்.
* சிலேடை, இடக்கரடக்கல் அமைத்து பாடுவதில் வல்லவர்.
* குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் வாணிதாசன்.
** பாரதிதாசன் பெயரை உரைத்திட பாட்டு பிறக்குமடா .