புதுக்கவிதை – தருமு சிவராம்(பிரமிள்):
தோற்றம்: 20-04-1939 மறைவு: 06-01-1997
சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தருமு சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார் பிறகு பெரும்பாலான வாழ்நாளை சென்னையிலேயே கழித்தார்.
தருமு சிவராம் சிறப்புப் பெயர்:
1. பானு சந்திரன்
2. பிரமிள்
3. பானு அரூப்
4. அரூப் சிவராம்
5. படிமக் கவிஞர்
6. ஆன்மீக கவிஞர்
தருமு சிவராமு எழுதிய இதழ்கள்:
1. தருமு சிவராமு “எழுத்து” எனும் சி. சு. செல்லப்பாவின் பத்திரிக்கைகளில் முதன்முதலில் கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தார்.
2. மௌனியின் கதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி உள்ளார்.
தருமு சிவராமு பற்றிய முக்கிய குறிப்புகள்:
1. இலங்கையில் பிறந்த இவர் தமிழினத்தின் எழுத்தாளர் ஆவார்.
2. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்ற பல்வேறு வகையில் இவரை அழைக்கப்படுகின்றனர்.
3.புதுக்கவிதை முன்னோடிகளின் முக்கியமாக ஒருவராகவும் கருதப்படுகிறார்.
4. புத்தகங்களிலும், இதழ்களிலும் தருமு சிவராமு வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5. 1971 இல் “கண்டி பிரான்சு நட்புறவு” கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
6. இவர் ஆரம்ப கால கல்வி மட்டும் ராமகிருஷ்ண மடம் நடத்திய இரவு பாடசாலையில் படித்தார்.
7. களிமண் சிற்பங்கள் செய்வதில் சிறந்தவராக தருமு சிவராமு விளங்கினார்.
8. அடிக்கடித் தன் பெயரை மாற்றி புதுப்பித்து கொண்டிருப்பவர் தருமு சிவராம்.
9. இவரது கவித்துவம் 2000ம் ஆண்டு தமிழ் கவிதை வரலாற்றில் தனித்து உயர்ந்து உயர்ந்து திகழ்ந்தது.
10. ஆன்மீக எழுத்துக்கள் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நூல்கள் தெளிவாக எழுதியவர் இவர்தான்.
தருமு சிவராமு பெற்ற விருதுகள்:
1. நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன் விருதை” இவருக்கு வழங்கியது.
2. கும்பகோணம் சிலிக்குயில் “புதுமை பித்தன் வீறு” விருதை வழங்கியது.
தருமு சிவராமு பற்றி புலவர்கள் கூற்று:
1. பிரமில் விசித்திரமான படிமவாதி – சி. சு செல்லப்பா.
2. உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் – சி. சு செல்லப்பா.
3. தமிழின் மாமேதை – ஜானகிராமன்.
தருமு சிவராமு எழுதிய கவிதை நூல்கள்:
1. கண்ணாடி உள்ளிருந்து
2. கைப்பிடியளவு கடல்
3. மேல்நோக்கிய பயணம்
4. பிரமிள் கவிதைகள்
5. விடிவு
தருமு சிவராமு எழுதிய நாவல் நூல்கள்:
1. ஆயி
2. பிரசன்னம்
தருமு சிவராமு எழுதிய நாடக நூல்:
நட்சத்திரவாசி
தருமு சிவராமு எழுதிய உரைநடை நூல்:
மார்க்சும் மார்க்கீசியமும்
தருமு சிவராமு எழுதிய சிறுகதை நூல்கள்:
1. கருடனுர் ரிப்போர்ட்
2. அங்குலிமாலா
3. சந்திப்பு
4. சாமுண்டி
5. கிசு கிசு
6. பாறை
7. நீலம்
8. கோடாரி
9. அசரீரி
10. காடன் கண்டது
தருமு சிவராமின் கவிதை பற்றிய விமர்சனங்கள்:
பௌதிக எதார்த்தத்தை மீறி நிதர்சனங்களை பற்றி விசாரயமான பிரமிப்புகளின் வெளிப்பாடுகளே கவிதைகள்.
தருமு சிவராமின் சாதியைப் பற்றிய விமர்சனம்:
வைதீகம் நுழையும் இடத்தில் படைப்பூக்கம் விடைபெறும்
தருமு சிவராமின் மேற்கோள்கள்:
* கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும் என்ற தலைப்பில் பாரதியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
* சாது அப்பாத்துரையின் தியான தாரா எனும் நூல் சிறந்த மெயில் வாழ்க்கை நெறிநூல் ஆகும்.
தருமு சிவராமின் மறைவு:
1997 இல் வேலூர் அருகில் உள்ள கரடிகுடியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.