Categories
Uncategorized

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு……..

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

தோற்றம்: 13-04-1930

மறைவு   : 08-10-1959

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் மற்றும் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது வல்லவர் ஆவார்.

இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

 

வாழ்க்கைக் குறிப்பு:

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிற்றூரில் அருணாச்சலம்,  விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். இவருக்கு கணபதி சுந்தரம் என்ற மூத்த சகோதரரும், வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்தையும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பால். 1959 ஆம் ஆண்டு இவருடைய குழந்தை குமரவேல் பிறந்ததே அதே ஆண்டில் இவர் அகாலமரணம் அடைந்தார்.

 

எழுத்தாற்றல் பங்கு:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டக்கூடிய வல்லவர் ஆவார்.

மேலும் இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டும் தன்மை உடையவர். இவர் திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ‘ஜனசக்தி பத்திரிகை‘ வெளியிட்டு வந்தது.

1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

 

பொதுவுடமையின் ஆர்வம் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:

இளம் பருவத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடமைக் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) களிளும் ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார். நாடகக் கலையில் ஆர்வமும் விவசாய இயக்கத்தின் பால் அசைக்க முடியாத பற்றும் கொண்டிருந்தார்.

தஞ்சையைச்  சேர்ந்த வீரத் தியாகிகள், சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன்னுடைய 29ஆம் ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டார். இவருக்கு இருந்த நடிப் ஆசையின் காரணமாக “சக்தி நாடக சபா”வில் இணைந்தார்.

இந்த சக்தி நாடக சபாவில் தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜிகணேசன், எம். என். நம்பியார், எஸ்.வி. சுப்பையா, ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஓ.ஏ.கே தேவரின் நெருங்கிய நண்பர் ஆவார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய் திரைப்படமாகியும் அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர்.

ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நடிப்பை விட்டுவிட்டு பாடல் எழுதும் கலையை கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று “புரட்சிக்கவி”பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்து விட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பன் பரிமாணங்கள்:

1. விவசாயி

2. மாடு மேய்ப்பவர்

3. மாட்டு வியாபாரி

4. மாம்பழ வியாபாரி

5. இட்லி வியாபாரி

6. முறுக்கு வியாபாரி

7. தேங்காய் வியாபாரி

8. கீற்று வியாபாரி

9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி

10. உப்பளத் தொழிலாளி

11. மிஷின் டிரைவர்

12. தண்ணீர் வண்டிக்காரர்

13. அரசியல்வாதி

14. பாடகர்

15. நடிகர்

16. நடனக்காரர்

17. கவிஞர் (இறுதியாக)

 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த கௌரவம்:

தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் “பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது”.

மேலும் அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

 

எம்ஜிஆர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை பற்றி கூறியது:

மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் என்று அவரே சொல்லியிருக்கிறார்.

தன்னுடைய நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்வது வழக்கம்.

“உழைப்பின் மேன்மை சொன்ன பாடல்;”காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”

 

மூட நம்பிக்கைக்கு எதிரான பறைசாற்றிய பாடல்:

“வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க – உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க… வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே – நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே”

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பொன்னான வரிகள்:

மேடுபள்ளம் அற்ற சமுதாயம் உருவாக செதுக்கப்பட்டதே, “வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா – தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா”

“திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” 

 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் தனிமனித நம்பிக்கை:

சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைய, “ குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம் திருந்த மருந்து சொல்லட”. 

தனிமனித தன்னம்பிக்கையை உயர்த்தி பிடிக்க,” வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே!” 

 

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மறைவு:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களில் தனது 29 ஆவது அகவையில் 1959 அக்டோபர் 8ஆம் நாள் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு ஐந்து மாத குழந்தை பிறந்தது. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி இவரது அஞ்சலியில் “கண்களை மூடுகிறேன் கல்யாணம் தெரிகிறார்” -ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை – கலை உலகம் இருள்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *