தமிழ் இலக்கியம்:
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று ஆகும். வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, 96 வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்களில் உள்ளன தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கியம் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது:
1. பழங்காலம்
2. இடைக்காலம்
3. இக்காலம்
பழங்காலம்:
* சங்க இலக்கியம் (கி-மு 500 முதல் கி.பி 300 வரை)
* நீதி இலக்கியம் (கி.பி 300 முதல் கி.பி 500 வரை)
இடைக்காலம்:
* பக்தி இலக்கியம் (கி.பி 700 முதல் கி.பி 900 வரை)
* காப்பிய இலக்கியம் (கி.பி 900 முதல் கி.பி 1200 வரை)
* உரைநூல்கள் (கி.பி 1200 முதல் கி.பி 1,500 வரை)
* புராண இலக்கியம் (கி.பி 1500 முதல் கி.பி 1800 வரை)
1. புராணங்கள், தலபுராணங்கள்
2. இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
இக்காலம்:
1. பத்தொன்பதாம் நூற்றாண்டு
* கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
* புதினம்
2. இருபதாம் நூற்றாண்டு
* கட்டுரை
* சிறுகதை
* புதுக்கவிதை
* ஆராய்ச்சிக் கட்டுரை
3. இருபத்தோராம் நூற்றாண்டு
* அறிவியல் தமிழ்
* கணினி தமிழ்