சி. சு. செல்லப்பா
தோற்றம் :29-09-1912 மறைவு : 18-12-1998
சி. சு. செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர்.” எழுத்து” என்ற பத்திரிக்கையை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி. சு. செல்லப்பா ஆவார்.
பல நல்ல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிகையின் மூலம் ஊக்குவித்தவர். செல்லப்பா சிறந்த விமர்சகர்களாலும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட்சமிநாதன், நா.முத்துசாமி , பிரமீள் மற்றும் பல எழுத்தாளர்கள் சி சு செல்லப்பாவின் ஆல் ஊக்குவிக்கப்பட்வர்கள்.
தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர் திகழ்ந்தவர்.
சி. சு. செல்லப்பா வாழ்க்கை வரலாறு:
தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி சி சு செல்லப்பா தன் தாய் மாமாவின் ஊரான வத்தலகுண்டில் வளர்ந்தார்.
மதுரைக் கல்லூரியில் பி.ஏ படிப்பினை முடித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
“சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு “மணிக்கொடி” இதழ் கை கொடுத்தது.
சரசாவின் பொம்மை எனும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை சி. சு. செல்லப்பா வுக்கு அளித்தது.
1937 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த சி. சு. செல்லப்பா மீனாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1947 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாக பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி. சு. செல்லப்பா அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சி. சு. செல்லப்பா தன் வாழ்நாளில் விமர்சக எழுத்தாளராக அவர் ஆற்றிய பங்கு:
சிறுகதை எழுத்தாளராக இருந்த சி. சு. செல்லப்பா விமர்சகர்களில் ஈடுபடலானார். விமர்சனத்துக்கு தனி இதழ் தொடங்க எண்ணினார் பத்திரிகைகளில் பணி புரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்தி எழுத்து என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கு இடையே 1970ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார் ஆனால் 112 இதழ்கள் மிக சிரமப்பட்டு வெளிக்கொண்டுவந்து “எழுத்து” காலாண்டு இதழாக மாற்றப்பட்டது 119 இதழுடன் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
குறும் புதினம் என்றால் என்ன:
அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விட சிறியதாகவும் இருக்கும் கதை தான் குறும் புதினம் அல்லது சிறுகதைக்கும் தினத்திற்கும் இடைப்பட்ட வடிவம் அல்லது குறுநாவல் என்று அழைக்கப்படுகிறது.
சி. சு. செல்லப்பாவின் இலக்கணத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்பு:
1. சிறுகதை
2. புதினம்
3. விமர்சனம்
4. மொழிபெயர்ப்பு
சி. சு. செல்லப்பா பணியாற்றிய இதழ்கள்:
1. சந்திரோதயம்
2. தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
3. எழுத்து என்ற இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
சி. சு. செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள்:
1. வாடிவாசல்
2. சுதந்திரதாகம்
3. ஜீவனாம்சம்
4. பி எஸ் ராமையாவின் சிறுகதை பாணி
5. தமிழ் சிறுகதை பிறக்கிறது
1. சிறுகதை தொகுதிகள்:
* சரசாவின் பொம்மை
* மணல் வீடு
* சி சு செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்
2. குறும் புதினம்:
வாடிவாசல்
3. புதினம்
* ஜீவனாம்சம்
* சுதந்திர தாகம்
4. நாடகம்
* முறைப்பெண்
5. கவிதைத் தொகுதி
* மாற்று இதயம்
6. குறுங்காப்பியம்
* இன்று நீ இருந்தால்
* 2000 வரிகளை கொண்ட நெடுங்கவிதை இல் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இன்னூல் எழுத்து ஏற்றின் 114வது இதழில் வெளிவந்தது.
சி. சு. செல்லப்பா படைப்பிற்கு கிடைத்த விருது:
இவரது “சுதந்திர தாகம்” புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகதமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சி. சு. செல்லப்பாவின் மறைவு:
சி. சு. செல்லப்பா 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இவ்வுலகை விட்டு இயற்கை எய்தினார்.
சி. சு. செல்லப்பாவின் புகழ்பெற்ற வாடிவாசல் கவிதை புத்தகத்தைப் பற்றி ஒரு சிறு விளக்கம்:
சி. சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் நாவலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அதன் அருகில் இருந்து பார்ப்பது போன்ற நெருக்கமான உணர்வை தத்துரூபமாக சொல்லப்பட்டுள்ளது. விறுவிறுப்பான முறையில் மிக இயல்பாக ஒரே நாளில் அந்த மாலை நேரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு அதை ஒட்டிய நிகழ்ச்சிகளையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு 70 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்த நாவலில் அதன் சொல்லப்பட்ட விஷயங்களும் ஆழமும் நேர்த்தியும் அதிகம் வாசிக்கும். அனைவரையும் அந்த சூழலுக்கு அழைத்துச் செல்லக் கூடிய அந்த வட்டார வழக்கு மொழி நடை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல் என்பதை மிக உறுதியாக சொல்ல முடியும்.