சங்க இலக்கியம்:
சங்க இலக்கியம் தமிழில் கி.மு 500 லிருந்து கி.பி 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றாகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப் புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் நிலை உள்ளோரும் பெண்களும் நாடாளும் மன்னரும் உள்ளனர். சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமை படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன ஆகையால் பண்டைய தமிழகத்தில் காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளை சங்க இலக்கியப் பாடல்கள் அறியத் தருகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ .வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சு பெறப்பட்டன.
சங்க இலக்கிய நூல்கள்:
1. எட்டுத்தொகை நூல்கள்
2. பத்துப்பாட்டு நூல்கள்
3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
1. எட்டுத்தொகை நூல்கள்:
* நற்றினை
* குறுந்தொகை
* ஐங்குறுநூறு
* பதிற்றுப்பத்து
* பரிபாடல்
* கலித்தொகை
* அகநானூறு
* புறநானூறு
2. பத்துப்பாட்டு நூல்கள்:
* திருமுருகாற்றுப்படை
* பொருநராற்றுப்படை
* சிறுபாணாற்றுப்படை
* பெரும்பாணாற்றுப்படை
* நெடுநல்வாடை
* குறிஞ்சிப்பாட்டு
* முல்லைப்பாட்டு
* மதுரைக்காஞ்சி
* பட்டினப்பாலை
* மலைபடுகடாம்
3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
* திருக்குறள்
* நான்மணிக்கடிகை
* இன்னா நாற்பது
* இனியவை நாற்பது
* களவழி நாற்பது
* திரிகடுகம்
* ஆசாரக்கோவை
* பழமொழி நானூறு
* சிறுபஞ்சமூலம்
* முதுமொழிக்காஞ்சி
* ஏலாதி
* கார் நாற்பது
* ஐந்திணை ஐம்பது
* திணைமொழி ஐம்பது
* ஐந்திணை எழுபது
* திணைமாலை நூற்றைம்பது
* கைந்நிலை
* நாலடியார்