கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு:
கண்ணதாசனின் இயற்பெயர் – முத்தையா
கண்ணதாசன் பிறந்த ஊர் – ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுகூடல்பட்டி.
கண்ணதாசனின் பெற்றோர் – சாத்தப்பன், விசாலாட்சி அம்மையார்.
கண்ணதாசன் வாழ்ந்த காலம் – 1927 முதல் 1981 வரை.
கண்ணதாசனின் புனைப்பெயர் :
1. காரை முத்துப் புலவர்
2. வணங்காமுடி
3. கமகப்பிரியா
4. பார்வதி நாதன்
5. துப்பாக்கி
6. ஆரோக்கியசாமி
கண்ணதாசனின் வேறு பெயர்கள் (சிறப்புப் பெயர்கள்):
1. கவியரசு
2. கவிச்சக்கரவர்த்தி
3. குழந்தை மனம் கொண்டவர்
கவிஞர் கண்ணதாசனின் படைப்புகள்:
1. மாங்கனி
2. ஆட்டனத்தி ஆதிமந்தி
3. கவிதாஞ்சலி
4. பொன்மலை
5. அம்பிகா
6. அழகு தரிசனம்
7. பகவத் கீதை விளக்கவுரை
8. ஸ்ரீ கிருஷ்ண கவசம்
9. பாரி மலைக்கொடி
1o. அர்த்தமுள்ள இந்துமதம்
11. சந்தித்தேன் சிந்தித்தேன்
12. அனார்கலி
13. தெய்வ தரிசனம்
14. பேனா நாட்டியம்
இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காப்பியம்)
கவிஞர் கண்ணதாசனின் நாவல்கள்:
1. சேரமான் காதலி (சாகித்திய அகடமி விருது)
2. குமரி காண்டம்
3. வேலன்குடி திருவிழா
4. விளக்கு மட்டுமா சிவப்பு
5. ஆயிரங்கால் மண்டபம்
6. சிங்காரி பார்த்த சென்னை
7. ஊமையன் கோட்டை
8. ராஜ தண்டனை
9. சிவகங்கை சீமை
கண்ணதாசனின் தன் வரலாறு நூல்கள்:
1. வனவாசம்
2. மனவாசம்
கண்ணதாசன் எழுதிய இதழ்கள்:
1. தென்றல்
2. கண்ணதாசன்
3. சண்டமாருதம்
4. முல்லை
5. தென்றல் திரை
6. திருமகள்
7. கடிதம்
8. மேதாவி
9. திரை ஒளி
திரைப்படத்துறையில் கண்ணதாசனின் பங்களிப்பு:
ஏறத்தாழ 35 ஆண்டுகள் திரைத் துறையில் பாடல்களை எழுதி உள்ளார்.
கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் பின்வருமாறு:
இல்லற ஜோதி -1954
மதுரை வீரன் -1956
நானே ராஜா -1956
ராஜா தேசிங்கு
மகாதேவி -1957
தெனாலிராமன் -1957
மாலையிட்ட மங்கை -1958
மன்னாதி மன்னன் -1960
திருடாதே – 1961
ராணி சம்யுக்தா – 1962
தெய்வத் திருமணங்கள்
கருப்பு பணம் – 1964
கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் திரைப்படப் பாடகர் யேசுதாஸ் அவர்களின் குரலில் அமைந்த “கண்ணே கலைமானே” எனும் பாடல் ஆகும்.
கண்ணதாசனின் சிறப்பு மேற்கோள்கள்:
“காலை குளித்து எழுந்து கருஞ்சாந்து பொட்டும் இட்டு ;கரு நாகப்பாம்பெனவே கார் கூந்தல் பின்னல் இட்டு”
“போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரி தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்..
“வீடுவரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ??
“மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்; மணல் கூட சில நாளில் பொண்ணா கலாம்; ஆனாலும் அவையாவும் நீயாகுமா?? அம்மா என்றழைக்கின்ற சேய்யாகுமா???