Categories
சுரதா எழுதிய நூல்கள்

உவமை புலவர் – சுரதா வாழ்க்கை வரலாறு Tnpsc group 4 pdf download

மரபுக் கவிதை – சுரதா.

 

தோற்றம்:23-11-1921 

 மறைவு   :20-06-2006
 
தஞ்சை மாவட்டத்தில் பழையனூர் (சிக்கல்) எனும் ஊரில்   திருவேங்கடம் மற்றும் செண்பக அம்மையார் ஆகிய இருவருக்கும் மகனாகப் பிறந்தவர் இராசகோபாலன் என்ற இயர்பெயரால் அழைக்கப்படும் “கவிஞர் சுரதாவின் சிறப்பினை” இங்குு காணலாம்.
 
கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். தன் மாற்றுப் பெயரில் சுருக்கமாக சுரதா என்ற பெயரில் பல மாற்று கவிதைகளைை தொகுத்துள்ளார். 
செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் பெற்றார். இதனால் இவரை உவமை புலவர் என சிறப்பித்துக் கூறுகின்றனர்.
மேலும் இவர் சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.
 
பாரதிதாசன் உடன் தொடர்பு:
1941ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கி இருந்து அவரின் கவிதைப் பணிக்குத் துணை நின்றார்.
* பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல்.
* அச்சு பணிகளைை கவனித்தல்.
* பாவேந்தர் நூல் வெளியீட்டிற்கு துணைை நிற்றல்.
எனப் பல நிலைகளில் பாவேந்தர் பாரதிதாசன் உடன் சுரதா தொடர்பு வைத்துள்ளார்.
 
கவிதை இயற்றுவதில் சுரதாவின் பங்கு:
கவிஞர் சுரதாவின் சொல்லடா எனும் தலைப்பில் அமைந்த கவிதையை புதுக்கோட்டையிிிலிருந்து வெளிவந்த பொன்னி எனும் இதழ் 1947 ஏப்ரல் திங்கள் இதழில் வெளியிட்டுு இவரை பாரதிதாசனின் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. 
பாவேந்தர் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமை கவிஞர்  சுரதாவை சாரும். 
அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபோது  அவரின் உதவியாளராக இருந்தார்.
 
திரைப்படத்துறையில் கவிஞர் சுரதாவின் பங்கு:
சுரதாவின் கலை உணர்வை தெரிந்துகொண்ட கு.ச. கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரை திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக உரையாடல் எழுதினார்.
கவிஞர் சுரதா மிகக் குறைவான பாடல்களை எழுதியுள்ளார்.
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சுரதா அவைகள் பின்வருமாறு
“அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே”
“ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா”
மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
 
எழுத்துப் பணியில் சுரதாவின் பங்கு:
கவிஞர் சுரதாவின் முதல் நூல் “சாவின் முத்தம்” இதனை v.r.m செட்டியார் என்பவர் 1946 ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும் இவர்  1956 இல் பட்டத்தரசி என்ற சிறுுுுு காவிய நூலை வெளியிட்டார்.1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி என்ற இதழில் தொடர்ந்து கவிதைகளைை எழுதி வந்தார். 
 
கவிஞர் சுரதாவின் படைப்புகள்:
1. தேன்மழை
2. துறைமுகம்
3. சிரிப்பின் நிழல் 
4. சுவரும் சுண்ணாம்பும்
5. பாரதிதாசன் பரம்பரை
6. அமுதும் தேனும்
7. வினாக்களும் சுரதாவின் விடைகளும்
8. உதட்டில் உதடு
9. நெய்தல் நீர்
10. எப்போதும் இருப்பவர்கள்
11. எச்சில் இரவு
12. சாவின் முத்தம் (முதல் நூல்)
13. கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
14. சிறந்த சொற்பொழிவுகள்
15. சுரதா கவிதைகள்
16. சொன்னார்கள்
17. சுவரும் சுண்ணாம்பும்
18. தொடாத வாலிபம்
19. தமிழ்ச் சொல்லாக்கம்
20. நெஞ்சில் நிறுத்துங்கள்
21. பட்டத்தரசி
22. புகழ்மாலை
23. பாவேந்தரின் காளமேகம்
24. முன்னும் பின்னும்
25. மங்கையர்க்கரசி
26. வார்த்தை வாசல்
27. வெட்ட வெளிச்சம்.
 
கவிஞர் சுரதா பெற்ற சிறப்புகள்:
* 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
* 1972 இல் தமிழக அரசு “கலைமாமணி” என்ற விருது வழங்கி சிறப்பித்தது.
 1978 இல் ம.கோ. தலைமையில் நடைபெற்ற அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிி சிறப்பித்தது.
* தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கியது.
* 1982 இல் சுரதாவின் மணி விழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் 60 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கியது.
* 1982 இல் சுரதாவின் கவிதை பணிகளை பாராட்டி குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் “கவியரசர் பட்டம்” வழங்கப்பட்டது.
* 1987 இல் மலேசியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
* 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருது கவிஞர் சுரதாவிற்கு வழங்கியது.
* 1990 கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது கவிஞர் சுரதாவுக்கு வழங்கப்பட்டது.
* சுரதாவின் தேன்மழை நூலிற்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ரூபா ஒரு லட்சம் “ராசராசன் விருது வழங்கியது”.
 
சுரதாவின் மறைவு:
கவிஞர் சுரதா தன்னுடைய 84 ஆம் வயதில் 20-06-2006 இல் செவ்வாய்க்கிழமை சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
 
* சுரதாவின் நினைவாக 29-09-2008 இல் சென்னையில் சுரதாவிற்கு நினைவுச் சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இச்சிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டது.
 
* கவிஞர் சுரதாவின் நினைவாக அவர் இயற்றிய நூல்கள் மற்றும் கவிதைகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடப் பகுதிகளில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
* மேலும் சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *