Skip to main content

Posts

Showing posts from May, 2021

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - வாழ்க்கை வரலாறு

  கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 1876 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நான்குு மைல் தொலைவில் உள்ள தேரூர் எனும் சிற்றூரில் ஜூலை மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை  "சிவதாணுுுு பிள்ளை என்பவருக்கும் ஆதிலட்சுமிி அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் "கவிமணிிிிி தேசிய விநாயகம் பிள்ளை". ஆசிரியர் பணி: கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நாகர்கோயிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார். குழந்தைகளுக்கான இலக்கியப் பணி: தமிழில் குழந்தைகளுக்கான முதன்முதலில் பாடல்களை எழுதிய இவர்.1938 ஆம் ஆண்டு வெளிவந்த மலரும் மாலையும் தொகுதியில் 25 இ க்கும் மேற்பட்ட குழந்தை பாடல்கள்,7 கதைப்பாடல்கள் இடம்பெற்றிருந்தது.   தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு எனும்  பாடல் இன்றளவும் பேசப்படுகிறது. சிறந்த மொழிபெயர்ப்பாளர்: 1. எட்வின் அர்னால்டின் "ஆசிய ஜோதி"   எனும் நூலை தமிழில் தழுவி எழுதினார். 2. பாரசீக கவிஞர் உமர் கய்யாம் நூலை தம...

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

  நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை: கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பழைய சேலம் மாவட்டம் தற்போது உள்ள  நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் என்ற தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தவர் தான்"நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை". இராமலிங்கனார் - இன் தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர். இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் விளங்கி வந்தார். நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளிக் கல்வி பயின்ற இவர் 1909 இல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் BA படித்தார். இவர் ஆரம்ப காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும், பின்பு தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்து வந்தார். பின்னர் வே ராமலிங்கம் பிள்ளை திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க கொண்ட தனது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றினார். மேலும் இவர் அரசின் தடை உத்தரவுகளை மீறி மேடையில் சொற்பொழிவு ஆற்று...

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

** பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு: புரட்சிக்கவி என்று பலராலும் அறியப்பட்ட புதுவை (பாண்டிச்சேரி) மாநிலத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 தில்   செங்குந்தர் கைக்கோள  முதலியார்  மரபில் பெரிய வணிகராக இருந்த கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாளுக்கு பிறந்தவர்தான் "பாரதிதாசன்". பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம் இவர் 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையாரை மணந்தார். ** பாரதியார் மீது பற்று கொண்ட பாரதிதாசன்: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்ட பாரதிதாசன் அவரது மானசீக குருவாகக் கருதப்படுகிற பாரதியாரின் பாடலை தனது நண்பனின் திருமண விழாவில் பாடி அவ்விழாவில் பாரதியை நேரில் பார்த்து சந்திக்கவும் செய்தார்.    பிறகுுு பாரதியாரிடம் இருந்து பாராட்டு பெற்றதோடுு மட்டுமல்லாமல்  அவரிடமிருந்துுு நட்பும் தொடங்கியதுு.   அன்றுு முதல் பாரதிதாசன் தன் இயற்பெயரான கனகசுப்புரத்தினம் எனும் பெயரை "பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்".    ** பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற வரிகள்: "எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே". "புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோ...