உலா இலக்கியம் விரிவான விளக்கம்:
உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலா வருவதை சிறப்பித்துக் கூறுவதால் இந்நூல் உலா இலக்கியம் எனப் பெயர் பெற்றது.
உலா என்பதற்கு "பவனி வரல்"என்பதன் பொருளாகும்.
உலா இலக்கியம் பெயர் வர காரணம்:
தலைவன் வீதியில் உலா வர அவனைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மட்டத்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு வகை பருவ "மகளிர்-களும்" கண்டு காதல் கொள்வது கூறுவது "உலா என்னும் சிற்றிலக்கியம்" ஆகும்.
உலாவின் வேறு பெயர்கள் பின்வருமாறு:
1. பவனி
2. உலாப் புறம்
3. புறா புற
4. உலா மாலை
5. பெண்பாற் கைக்கிளை
தசாங்கம் எனும் (10 உறுப்புக்கள்)உலா இலக்கியத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
* உலா இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும்.
* தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும்.
* கலிங்கத்துப்பரணி கழித்தால் இசையால் பாடப்படும்.
* முத்தொள்ளாயிரம் வெண்பாவால் இயற்றப்படும்.
உலா முன்னிலை:
பாட்டுடைத் தலைவன் சிறப்பு நீராடல் ஒப்பனை செய்தல் பரிவாரங்கள் புடை சூழ தன் ஊர்தியில்் ஏறிி உலா வரல் அல்லதுு பவனி வரல் ஆகியவற்றை உலா முன்னிலை என்று அழைக்கப்படுகிறது.
உலா பின்னிலை:
உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தன் காதலை தனித்தனியாக கூறுவது உலாவின் பின்னிலை என அழைக்கப்படுகிறது.
உலாவில் இடம் பெறும் ஏழு பருவ மகளிரின் வயது பின்வருமாறு:
1. பேதை (5 - 7 வயது)
2. பெதும்பை (8 - 11 வயது)
3. மங்கை (12 - 13 வயது)
4. மடந்தை (14 - 19 வயது)
5. அரிவை (20 - 25 வயது)
6. தெரிவை (24 - 32 வயது)
7. பேரிளம்பெண் (33 - 40 வயது).
* உலா பாடுவதில் வல்லவர்கள் ஒட்டக்கூத்தர்.
* கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் இரட்டையர்கள்.
சிறந்த உலா நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு:
1. திருக்கயிலாய ஞான உலா - சேரமான் பெருமாள் நாயனார்.
திருக்கைலாய ஞான உலா வின் வேறு பெயர்கள் (ஆதி உலா, தெய்வீக உலா, தமிழில் தோன்றிய முதல் உலா).
2. மூவர் உலா - ஒட்டக்கூத்தர்.
மூவர் உலா (விக்கிரம சோழன் உலா, இரண்டாம் குலோத்துங்க சோழன் உலா, இரண்டாம் ராஜராஜ சோழன் உலா).
3. ஞான உலா - வேதநாயகம் சாஸ்திரியார்.
4. ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்கள்.
இரட்டையர்கள் (இளஞ்சூரியன், முது சூரியன்).
5. திருவாரூர் உலா - வீரராகவர்.
வீரராகவர் (அந்தக்கவி வீரராகவர்).
Comments
Post a Comment