ராசராச சோழன் உலா – ஒட்டக்கூத்தர்.
ஒட்டக்கூத்தர் இயற்றிய மூன்று உலாக்கள் யாவை:
1. விக்கிரம சோழன் உலா
2. குலோத்துங்க சோழன் உலா
3. ராசராச சோழன் உலா
மேற்கூறிய மூன்று உலாக்கள் பாட்டன், தந்தை, மகன் போன்றோரை பற்றி பாடுவது. ஆகிய மூவரை பாடுவதால் “மூவருலா”என்றுுு அழைக்கப்படுகிறதுு.
ராச ராச சோழன் உலா தெளிவான விளக்கம் பின்வருமாறு காணலாம்:
இராசராச சோழனுலா இந் நூலினை இயற்றியவர் “கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ஒட்டக்கூத்தர்” ஆவார். கவிசக்கரவர்த்தி எனும் கல்வெட்டின் மூலம் இந்நூலை ஒட்டக்கூத்தர் இயற்றப்பட்டதாக வரலாற்றில் கூறுகிறதுு.
இராசராச சோழனுலா சிறந்த கவி நயம் கொண்ட பாடல்களை கொண்டுள்ளதால் இப்பாடல்களை கண்ணிகள் என்றுு அழைக்கப்படும்.
கண்ணிகள் – இரண்டு அடிகளைக் கொண்டது.
ராசராச சோழன் உலா நூல் குறிப்பு:
ராசராச சோழன் உலாவில் 391 கண்ணிகள் உள்ளன. இந்நூலைை அரங்கேற்றும் போதுு கேட்ட ராசராசன் ஒவ்வொரு கன்னிகளுக்கு ஓர் ஆயிரம் பொன் பரிசாகத் தந்தான் என்பது வரலாறு.
இரண்டாம் இராசராச சோழன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன் ஆவார். தக்கயாகப்பரணி உருவாக காரணம் இவனே ஆகும்.
இராசராச சோழனுலா வரலாறு:
இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் சேரர்கள் உடன் வஞ்சி மாநகரில் கடும் போர் நிகழ்ந்ததாக தகைய பரணியில் அறியலாம். ராசராச சோழன் உலாவில் சோழர்களுக்கு செலுத்த வேண்டிய வரியை சேரன் கட்ட மறுத்ததால் சோழர்கள் சேரன் மீது படை எடுத்ததாக இந்நூல் கூறுகிறது.
இத்தகைய போர் வஞ்சி மாநகரில் நிகழ்ந்ததாகவும், சோழர் படைதணை பல்லவராயன் பெருமாள் நம்பி தலைமை தாங்கி போரை வென்றுள்ளார் என்பது வரலாறு.
காவிரி பிரச்சினை தோன்றிய காலம் இவன் காலம் தான் என்று வரலாறு ராசராச சோழன் உலாவில் கூறுகிறது.
“சுழியிட்ட காவிரிக்கு சோணாடு வாழ
வழியிட்ட வால் காண வாரீர்”
மேற்கூறிய வரிகளின் மூலம் காவிரி பிரச்சனையை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இராசராச சோழனுலா முக்கிய வினா விடை குறிப்புகள்:
1. பிரபந்தம் எனும் வடசொல்லுக்குு நன்கு கட்டப்பட்டது என்று பொருளாகும்.
2. சிற்றிலக்கியங்களின்் இலக்கியத்தைை விளக்கிி கூறும் நூல் பாட்டியல் நூல்கள்.
3. உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.
4. ராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
5. உலா என்பதற்கு பவனி வரல் எனப்படும்.
6. ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்.
7. ஒட்டக்கூத்தரின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.
8. ஒட்டக்கூத்தரின் வேறுுுுபெயர்கள்
கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், சர்வ கவி, காலக் கவி.
9. உலா பாவகை கலிவெண்பா.
10. மூவருலா என்னும் நூலைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.
11. புயம் என்ற மங்கலச் சொல்லால் பாடப்பட்ட நூல் ராசராச சோழன் உலா.