முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்.
குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு:
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூலினை இயற்றிய குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் வல்லமை மிக்கவர்.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள்:
1. கந்தர் கலிவெண்பா
2. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
3. மதுரைக் கலம்பகம்
4. சகலகலாவல்லி மாலை
5. நீதிநெறி விளக்கம்
6. திருவாரூர் மும்மணிக்கோவை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூல் குறிப்பு:
96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலில் இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ, பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவனை குழந்தையாகக் கருதி பாடுவது தான் “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்”. மேலும் பாட்டுடைத் தலைவனின் செயற்கரிய செயல்களை எடுத்துரைப்பது பிள்ளைத்தமிழ் ஆகும்.
இப்பிள்ளை தமிழில் பத்து பருவங்கள் அமைத்து பருவத்திற்கு பத்து பாடல்கள் என “100”பாடல்களால் பாடப்பட்டது.
இப் பிள்ளைத்தமிழ் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது அவையாவன பின்வருமாறு:
1. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்
2. பெண்பாற் பிள்ளைத்தமிழ்
இந்நூலில் இடம்பெறும் பருவங்கள்:
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்:
கடைசி மூன்று பருவங்கள் – சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
பெண்பாற் பிள்ளைத்தமிழ்:
கடைசி மூன்று பருவங்கள் – கழங்கு, அம்மானை, ஊசல்.
இரு பாலருக்கும் பொதுவான பருவங்கள்:
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி .
One reply on “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்”
Tq