Categories
Uncategorized

பெத்தலேகம் குறவஞ்சி – வேதநாயகம் சாஸ்திரியார்.

 பெத்தலேகம் குறவஞ்சிவேதநாயகம் சாஸ்திரியார்.

 

 


வேதநாயகம் சாஸ்திரியார் ஆசிரியர் குறிப்பு:

வேதநாயகம் சாஸ்திரி தஞ்சை சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராக இருந்தவர். மேலும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்். இவர் இயற்றிய நூல்கள் சில பின்வருமாறு காணலாம்.

ஞான அந்தாதி,ஞான உலா, பெண் விடு தூதுு, பராபரன் மாலை, முதலிய சிற்றிலக்கியங்களைைை படைத்துள்ளார்்.  மேலும் இவர் நாட்டுப்புற இலக்கிய வடிவத்தில் சில நூல்களை எழுதி உள்ளார் அவைகள் கும்மி, எத்த பாட்டு, புலம்பல். 

 

பெத்தலேகம் குறவஞ்சி நூல் விளக்கம்:

பெத்தலேகம் குறவஞ்சி சிற்றிலக்கிய நூல்களில் ஒன்றாகும். இதில் இடம்பெற்றுள்ள வஞ்சி எனும் சொல் பெண்ணைக் குறிக்கும். குறவஞ்சிிி என்றால் குறத்தி பெண். குறவஞ்சி இலக்கியத்தில் இடம்பெறும் கதை மாந்தர்களில் குறத்தி பெண் சிறப்பிடம் அடைகிறாள். இதில் இடம்பெறும்்் கதைத் தலைவர் கடவுள் ஆகவோ அல்லது மன்னராகவும் இருப்பர்.  இவ்வகை குறவஞ்சிி இலக்கியம்  நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.

கிருத்தவ குறவஞ்சி நூல்களில் “பெத்தலேகம் குறவஞ்சி”  தனிிி சிறப்பை (1800) பெற்றுள்ளது. அண்மையில் தாமஸ் மலை குறவஞ்சி என்ற நூலும் வெளிவந்துள்ளதுு. இதனை இயற்றியவர் பேராசிரியர் சத்திய சாட்சி.

 

பெத்தலேகம் குறவஞ்சி அமைப்பு:

பெத்தலேகம் குறவஞ்சி ஐந்து பெரும் அமைப்புகளை பெற்றுள்ளது.

1. இறை வாழ்த்து

2. இயேசுவின் உலா

3. தேவ மோகினி காதல்

4. குறத்தி குறி கூறல்

5. சிங்கன் வருகை

இது “பாயிரம் முதலாக – வாழ்த்து ஈறாக” 72 உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 

பெத்தலேகம் குறவஞ்சி முக்கிய வினா விடைகள்:

* ஞானக் குறவஞ்சி என்று அழைக்கப்படும் நூல் பெத்தலேகம் குறவஞ்சி.

* குறவஞ்சி ஒரு 96 சிற்றிலக்கியங்களில் ஒன்று.

* குறவஞ்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது குறம், குறத்திப்பாட்டு, குறத்தி நாடகம்.

* பெத்தலேகம் குறவஞ்சி என்ற பெயர் அமைய காரணம் பெத்தலேகம் எனும் ஊரில் பிறந்த இயேசு நாதரின் மீது பாடப்பட்ட நூல் தான் “பெத்தலேகம் குறவஞ்சி”.

* பெத்தலேகம் குறவஞ்சியில் உலாவரும் தலைவரின் பெயர்”இயேசுநாதர்”.

* பாட்டுடைத் தலைவி மோகினியான சீயோன் மகள்.

* பெத்தலேகம் குறவஞ்சி இயற்றியவர் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்.

* வேதநாயகம் சாஸ்திரியார் மற்றொரு பெயர் ஸ்விதேசோ சாஸ்திரியார், ஞான தீபக் கவிராயர்.

* வேதநாயக சாஸ்திரியாரின் காலம் 18 ஆம் நூற்றாண்டு.

* வேதநாயக சாஸ்திரியின் பெற்றோர்கள் வேத சகாயம், ஞானப்பூ அம்மையார்.

* ்ஸ்விதேசோ கவிராயர் என சிறப்பு பெயர் பெற்றவர் வேதநாயகம் சாஸ்திரியார்.

* முதன்முதலில் தமிழில் கிறிஸ்துவ வழிபாட்டிற்காக பாக்கள் அமைத்தவர் வேதநாயகம் சாஸ்திரியார்.

* எந்தப் பாடலை பாடியதால் ஞான தீபக் கவிராயர் என்ற பட்டத்தை வேதநாயகம் சாஸ்திரியார் பெற்றார் பெத்தலேகம் குறவஞ்சி.

* பெத்தலேகம் குறவஞ்சி எனும் பாடலை சென்னை வேப்பேரியில் உள்ள கிறிஸ்தவ சபை அரங்கில் அரங்கேற்றினார்.

* பெத்தலேகம் குறவஞ்சி பாடல் ஒரு இசை நாடகமாகும்.

* ஞானக் குறவஞ்சி என்னும் பெயர் பெற்ற நூல் பெத்தலேகம் குறவஞ்சி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *