கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வாழ்க்கை வரலாறு:
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 1876 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நான்குு மைல் தொலைவில் உள்ள தேரூர் எனும் சிற்றூரில் ஜூலை மாதம் 27 ஆம் நாள் திங்கட்கிழமை “சிவதாணுுுு பிள்ளை என்பவருக்கும் ஆதிலட்சுமிி அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் “கவிமணிிிிி தேசிய விநாயகம் பிள்ளை”.
ஆசிரியர் பணி:
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நாகர்கோயிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார்.
குழந்தைகளுக்கான இலக்கியப் பணி:
தமிழில் குழந்தைகளுக்கான முதன்முதலில் பாடல்களை எழுதிய இவர்.1938 ஆம் ஆண்டு வெளிவந்த மலரும் மாலையும் தொகுதியில் 25 இ க்கும் மேற்பட்ட குழந்தை பாடல்கள்,7 கதைப்பாடல்கள் இடம்பெற்றிருந்தது. தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு எனும் பாடல் இன்றளவும் பேசப்படுகிறது.
சிறந்த மொழிபெயர்ப்பாளர்:
1. எட்வின் அர்னால்டின் “ஆசிய ஜோதி” எனும் நூலை தமிழில் தழுவி எழுதினார்.
2. பாரசீக கவிஞர் உமர் கய்யாம் நூலை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழிபெயர்த்து தழுவி எழுதினார்.
3. மும்மொழிப் புலமை வாய்ந்தவர்.
ஆராய்ச்சியில் பங்கு:
1. ஆராய்ச்சியிலும் தேசிய விநாயகம் பிள்ளை பல்வேறு பங்கினை அளித்துள்ளார்.
2. 1922 இல் “மனோன்மணியம் மறுபிறப்பு” எனும் திறனாய்வுு கட்டுரை எழுதியுள்ளார்.
3. காந்தளூர் சாலை எனும் ஆய்வுு நூலினை எழுதியுள்ளார்.
கவிமணி பெற்ற விருதுகள்:
1. 1954 இல் தேரூரில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
2. இந்திய அரசு அக்டோபர் 2005 ஆம் ஆண்டு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை இயற்றிய நூல்கள்:
1. அழகம்மை ஆசிரிய விருத்தம் ( கவிமணி இயற்றிய முதல் நூல்)
2. ஆசிய ஜோதி – 1941 ( அர்னால்டு எழுதிய “லைட் ஆப் ஏசியா” எனும் நூலின் மொழிபெயர்ப்பு நூல்)
3. மலரும் மாலையும் – 1938 ( கவிதை நூல்)
4. மருமக்கள் வழி மான்மியம் – 1942 ( நகைச்சுவை நூல்)
5. கதர் பிறந்த கதை – 1947
6. உமர்கய்யாம் பாடல்கள் – 1945 ( மொழிபெயர்ப்பு நூல்)
7. தேசிய கீர்த்தனங்கள்
8. குழந்தை செல்வம்
9. கவிமணியின் உரைமணிகள்
10. காந்தர் சாலை ( வரலாற்று நூல்)
11. தீண்டாதார் விண்ணப்பம்
கவிமணியின் சிறப்பு பெயர்கள்:
1. கவிமணி
2. குழந்தை கவிஞர்
3. தேவி
4. நாஞ்சில் நாட்டுக் கவிஞர்
5. தழுவல் கவிஞர்
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் முக்கிய பாடல் வரிகள்:
“”மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா “”