Categories
Uncategorized

காவடிச் சிந்து – அண்ணாமலை ரெட்டியார்

காவடிச் சிந்து – சிந்து பாவகை

 

 


சிந்து என்பது யாது:

இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றான சிந்து ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு ஆகும்.

5 இசை உறுப்புக்கள் பின்வருமாறு:

*  எடுப்பு 1

*  துடுப்பு 1

*  உறுப்புக்கள் 3 

சிந்துவின் 3 உறுப்புக்கள் பின்வருமாறு:

* பல்லவி

* அநுபல்லவி

* கண்ணிகள் அடங்கிய சரணம்.

 

காவடிச்சிந்து பற்றி சிறு குறிப்பு:

காவடிச்சிந்து இசை பா வகைகளில் ஒன்றான சிந்து பாவகை வடிவங்களில் ஒன்றாகும். மேலும் காவடிச்சிந்து தமிழ் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பண்டைய காலம் முதல் நாட்டார் வழக்கில் உள்ள இசை மரபே காவடிச்சிந்து என்று அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமானின் வழிபாட்டிற்காக பால் முதலிய பொருட்களைக் கொண்டு செல்லும்போது வழிநடைப் பாடலாக “காவடிச்சிந்து” பாடப்படுகிறது.

திருநெல்வேலிக்கு அருகே உள்ள கழுகு மலையில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெறும் நூல் தான் “காவடி சிந்து”.

காவடிச்சிந்து பல்லவியும், அநுபல்லவியும்   சரணங்கள் உரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும்.

 

காவடிச்சிந்து ஆசிரியர் குறிப்பு:

காவடிச் சிந்து என்ற இலக்கியத்தின் ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியார். இவரின் காலம் கிபி(1865-1891). அருணகிரியாரின் திருப்புகழ் தாக்கத்தால்  விளைந்த சங்க இலக்கியம் காவடிச்சிந்து ஆகும்.காவடிச் சிந்து என்ற இலக்கியத்தின் ஆசிரியர் அண்ணாமலை ரெட்டியார் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள “சென்னிகுளம்”என்ற ஊரில் பிறந்தார்.

அண்ணாமலை ரெட்டியாரின் தந்தையின் பெயர் செண்ணவர், தாயாரின்  பெயர் ஓவு அம்மாள்.

 

அண்ணாமலை ரெட்டியாரின் சிறப்பு:

தமிழில் முதல் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் காவடிச் சிந்துவின் தந்தை என அழைக்கப்படுகிறார். மேலும் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர்“பாரதியார்”.

பதினெட்டு வயதிலேயே ஊற்று மலைக்குச் சென்று அங்கு குறுநிலத் தலைவராக இருந்த இருதாலய மருதப்ப தேவரின் அரசவைப் புலவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அண்ணாமலை ரெட்டியார் எழுதிய வேறு நூல்கள் அல்லது படைப்புகள்:

* வீரை அந்தாதி

* கோமதி அந்தாதி

* சங்கரன்கோயில் திரிபு அந்தாதி

* வீரை பிள்ளைத்தமிழ்

* வீரை தலபுராணம்

* வீரை நவநீத கிருஷ்ணசாமிபதிகம்

* கருவை மும்மணிக்கோவை.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *