Categories
Uncategorized

உலா இலக்கியம் (சிற்றிலக்கியம்) வரலாறு

 

உலா இலக்கியம் விரிவான விளக்கம்:

 
உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலா வருவதை சிறப்பித்துக் கூறுவதால் இந்நூல் உலா இலக்கியம் எனப் பெயர் பெற்றது.
 
உலா என்பதற்கு “பவனி வரல்”என்பதன் பொருளாகும்.
 
 
உலா இலக்கியம் பெயர் வர காரணம்:
 
தலைவன் வீதியில் உலா வர அவனைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மட்டத்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு வகை பருவ “மகளிர்-களும்” கண்டு காதல் கொள்வது கூறுவது “உலா என்னும் சிற்றிலக்கியம்” ஆகும்.
 
 
உலாவின் வேறு பெயர்கள் பின்வருமாறு:
 
1. பவனி
2. உலாப் புறம்
3. புறா புற
4. உலா மாலை
5. பெண்பாற் கைக்கிளை
 
தசாங்கம் எனும் (10 உறுப்புக்கள்)உலா இலக்கியத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
* உலா இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும்.
 
* தூது இலக்கியம் கலிவெண்பாவால் இயற்றப்படும்.
 
* கலிங்கத்துப்பரணி கழித்தால் இசையால் பாடப்படும்.
 
* முத்தொள்ளாயிரம் வெண்பாவால் இயற்றப்படும்.
 
 

 

உலாவில் முன்னிலை பின்னிலை என இருவகைகள் உண்டு அவை பின்வருமாறு காணலாம்: 

 
உலா முன்னிலை:
பாட்டுடைத் தலைவன் சிறப்பு நீராடல் ஒப்பனை செய்தல் பரிவாரங்கள் புடை சூழ தன் ஊர்தியில்் ஏறிி உலா வரல் அல்லதுு பவனி வரல் ஆகியவற்றை  உலா முன்னிலை என்று அழைக்கப்படுகிறது.
 
உலா பின்னிலை:
உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தன் காதலை தனித்தனியாக கூறுவது உலாவின் பின்னிலை என அழைக்கப்படுகிறது.
 
 
உலாவில் இடம் பெறும் ஏழு பருவ மகளிரின் வயது பின்வருமாறு:
 
1. பேதை (5 – 7 வயது)
2. பெதும்பை (8 – 11 வயது)
3. மங்கை (12 – 13 வயது)
4. மடந்தை (14 – 19 வயது)
5. அரிவை (20 – 25 வயது)
6. தெரிவை (24 – 32 வயது)
7. பேரிளம்பெண் (33 – 40 வயது).
 
* உலா பாடுவதில் வல்லவர்கள் ஒட்டக்கூத்தர்.
* கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் இரட்டையர்கள்.
 
 
சிறந்த உலா நூல்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு:
 
1. திருக்கயிலாய ஞான உலா – சேரமான் பெருமாள் நாயனார்.
 
திருக்கைலாய ஞான உலா வின் வேறு பெயர்கள் (ஆதி உலா, தெய்வீக உலா, தமிழில் தோன்றிய முதல் உலா).
 
 
2. மூவர் உலாஒட்டக்கூத்தர்.
 
மூவர் உலா (விக்கிரம சோழன் உலா, இரண்டாம் குலோத்துங்க சோழன் உலா, இரண்டாம் ராஜராஜ சோழன் உலா).
 
 
3. ஞான உலாவேதநாயகம் சாஸ்திரியார்.
 
 
4. ஏகாம்பரநாதர் உலா – இரட்டையர்கள்.
 
இரட்டையர்கள் (இளஞ்சூரியன், முது சூரியன்).
 
 
5. திருவாரூர் உலா – வீரராகவர்.
வீரராகவர் (அந்தக்கவி வீரராகவர்).
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *