விக்கிரம சோழன் முதலாம் குலோத்துங்கனுக்கும், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் மதுராந்திக்கும் நான்காவது மகனாக பிறந்தவர் “விக்கிரம சோழன்”ஆவார். மூத்தவர்களை விட்டுு இவனே சோழ ராஜ்யத்தின் அரசனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப்பட்டான். பெரும்பாலும் இவன் ஆட்சியை போர்் இன்றியே அமைந்துள்ளது.
விக்கிரம சோழன் உலா இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார். மேலும் இந் நூலின் அமைப்பு பற்றிிி சற்று விரிவாக பின்வருமாறுு காண்போம்.
விக்கிரம சோழனின் வரலாறு:
விக்ரம சோழனின் தந்தை – முதலாம் குலோத்துங்க சோழன்.
முன்னவன்- முதலாம் குலோத்துங்க சோழன்.
பின்னவன்- இரண்டாம் குலோத்துங்க சோழன்.
விக்ரம சோழன் ஆட்சி செய்த நகரம் – கங்கைகொண்ட சோழபுரம்.
விக்கிரம சோழன் பிறந்த இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.
விக்கிரம சோழன் இறந்த இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.
விக்கிரம சோழன் வாழ்ந்த காலம்- கிபி 1118 முதல் 1136 வரை.
விக்ரம சோழனை பற்றி கூறும் வரலாற்று சிறப்புகள்:
* வேங்கிப் போர்
* கலிங்கப் போர்
* கங்காவடிப் போர்
* தேச அளவு
* திருசிற்றம்பலம்
* தியாக சமுத்திரம்.
விக்ரமசோழன் உலா நூல் அமைப்பு:
விக்கிரம சோழன் உலா 342 கண்ணிகளால் அமைந்தது. கண்ணிி என்பது இரண்டு வரிகளை உடையது என்பதன் பொருள். இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல் 43 கண்ணிகளில் விக்கிரம சோழனின் முன்னோர்களின் பெருமையும், விக்கிரம சோழன் பிறப்பு, பள்ளி எழுதல், இறைவனை வணங்குதல் போன்றவற்றைைைக் குறிப்பிடுகின்றது.
44 முதல் 51 வரையிலான கண்ணிகளில் விக்கிரம சோழன் அலங்காரம் செய்வது பற்றி கூறுகிறது.
52 முதல் 60 வரையிலான கண்ணிகளில் விக்கிரம சோழனின் பட்டத்து யானையின் பெருமையை கூறுகிறது.
90-வது கன்னி வரை உலாவில் சூழ வரும் சிற்றரசர்கள் ஆகியோர்களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளது.
91 முதல் 112வது கண்ணிவரை கூடவரும் பரிவாரங்கள் பற்றியும், அவர்கள் கூறுவது பற்றியும் இடம்பெற்றுள்ளது.
பின்னர் 113 முதல் 7 வகை பெண்களின் அழகைப் பற்றியும், அவர்கள் விக்கிரம சோழன் மீது கொண்டுள்ள காதல் பற்றியும் கூறும் கண்ணிகள் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன.
மூவருலா என்பது யாது:
விக்ரமசோழன் உலா உலா எனும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். இன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
இவர் இயற்றிய விக்கிரம சோழன் உலா உடன், குலோத்துங்க சோழன் உலா மற்றும் ராஜ ராஜ சோழன் உலா இம் மூன்றும் சேர்த்து “மூவருலா”என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய மூவர் உலாா வில்் விக்கிரம சோழனுலா மிக சிறந்ததாக கருதப்படுகிறது. விக்ரமசோழன் உலா கிபி 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
விக்ரமசோழன் உலா முக்கிய வினா-விடை தொகுப்பு:
* உலா என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
* உலாவிற்கு அழைக்கப்படும் வேறு பெயர் பெண்பாற் கைக்கிளை.
* உலா இலக்கியத்தை குறிக்கும் தொல்காப்பிய வரிகள் “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப”
* உணவிற்கு வழங்கும் வேறு பெயர்கள் உலா புறம், பவானி உலா, பவானி, பெண்பாற் கைக்கிளை.
* பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனை கண்டு ஏழுுவகை பெண்களும் காதல் கொண்டு பாடப்படும் நூல் உலா.
* ஏழு வகை மகளிர் பெயர்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண்.
* தமிழில் தோன்றிய முதல் உலா திருக்கயிலாய ஞான உலா.
* திருக்கயிலாய ஞான உலா வின் ஆசிரியர் சேரமான் பெருமான் நாயனார் ஆவார்.
* ஆதி உலா என அழைக்கப்படும் நூல் திருக்கயிலாய ஞான உலா.
* உலாவில் இத்தகைய பருவம் பாடுவது மிகவும் கடினம் பெதும்பைப் பருவம்.
* விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர்.
* ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்.
* ஒட்டக்கூத்தர் இயற்றிய வேறு நூல்கள்
ஈட்டி எழுபது, 4000 கோவை, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கத்து பரணி, அரும்பைத் தொள்ளாயிரம்
* ஒட்டக்கூத்தரின் வேறு பெயர்கள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், கால கவி, ஷர் வஞ்சக கவி.
* தியாக சமுத்திரம் அனங்கன் கண் என்று அழைக்கப்படுபவர் விக்ரமாதித்தன்.
* சிதம்பரம் கோவிலில் உள்ள புறமதிலுக்கு யாருடைய பெயர் விக்கிரம சோழன் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
* திருவரங்க நாதர் கோவிலில் ஐந்தாவது மதிலை கட்டியவர் விக்கிரம சோழன்.