Categories
Uncategorized

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் என்பது ஒரு சுவையான கவிதை தொகுப்பு ஆகும். மூவேந்தர்கள் ஆன சேரர், சோழர், பாண்டியர் இம்மூன்று மன்னர்களைப் பற்றியும் மற்றும் அந்நாட்டின் வளம்,போர்த்திறன், போர் நெறி, வள்ளல் தன்மை, பண்பு நலன்கள், நாட்டின் இயற்கை வளங்கள், படை யானைகளின் வலிமை, வேல் முதலிய கருவிகளின் சக்தி ஆகியவைை பற்றியும், அந்த மன்னர்களின் பால் ஒரு தலை காதல் கொண்டு உள்ளம் வாடுகின்ற பெண்ணின் உணர்ச்சிகளை பற்றி சொல்லும் சொல் ஓவியங்கள் பற்றியும் முத்தொள்ளாயிரம்எனும் சொல்லிற்கேற்ப 2700 பாடல்கள் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் பலவித கால அழிவிற்குப் பின்னர் நமக்குக் கிடைத்துள்ளவை 108 பாடல்கள் மட்டுமே. இவைகள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது.

21 பாடல்கள் சேர மன்னனைப் பற்றியும்,

30 பாடல்கள் சோழ மன்னனைப் பற்றியும்,

57 பாடல்கள் பாண்டிய மன்னனைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

 

முத்தொள்ளாயிரம் நூல் அமைப்பு:

வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம். இந்நூல் மன்னர்களின் பெயர்களை குறிப்பிடாமல் சேரர், சோழர், பாண்டியர் எனப் பொதுவாக பாடுகிறது. மூன்று மன்னர்களை பற்றி பாடப்பட்டு 900 பாடல்களைக் கொண்டதால்  இந்நூல் முத்தொள்ளாயிரம் என பெயர் பெற்றது.இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந் நூல் முத்தொள்ளாயிரம் எனும் பெயரில் பதிக்கப்பட்டுள்ளது.  இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

இந் நூலினை இயற்றிய ஆசிரியர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆக கருதப்படுகிறது. இந்நூல் சேரநாட்டினை -அச்சம் இல்லாத நாடு.

சோழ நாட்டினை -ஏற்கல சிறப்பு போர்க்கள சிறப்பு.

பாண்டிய நாட்டினை -முத்துடை நாடாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது.

 

முத்தொள்ளாயிரம் முக்கிய வினா விடைகள்:

* மூவேந்தர்கள் பற்றியும் பாடும் நூல் முத்தொள்ளாயிரம்.

* சேர மன்னனின் அடையாளச் சின்னம் வில்.

* சோழ மன்னனின் அடையாளச் சின்னம் புலி.

* பாண்டிய மன்னனின் அடையாளச் சின்னம் மீன்.

* சோழ மன்னன் புறாவின் வினை காக்க தன் தசையை அளித்தான்.

*  மார்போலையில் எழுதும் எழுத்தாணி – தந்தம்.

* விசும்பு என்பதன் பொருள் வானம்.

 முத்தொள்ளாயிரத்தில் உள்ள புறத்திரட்டு வெண்பாக்களின் வாயிலாக கிடைத்துள்ள வெண்பாக்கள் 108 வெண்பாக்கள் கிடைத்துள்ளன.

* முத்தொள்ளாயிரத்தில் உள்ள நூல்களில் மேற்கோள்களாக கிடைத்த வெண்பாக்கள் 22 வெண்பாக்கள் கிடைத்துள்ளன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *