Categories
நந்திவர்மன் வரலாறு

நந்திக்கலம்பகம் – மூன்றாம் நந்திவர்மன்

 

நந்திக் கலம்பகத்தின் வரலாறு:

கிபி 3 நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர் பல்லவர்கள். இவர்கள் தமிழ் மொழியை வளர்த்துு தமிழ் மொழியைை ஆதரித்தனர்். ஆனால் தமிழ் மொழியை ஆதரித்து வளர்த்த பல்லவ மன்னர்களில் மூன்றாம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவர். ஆகையால் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே “நந்திக்கலம்பகம்” ஆகும்.

இந்நூல் மற்ற நூல்களை போல அல்லாமல் வரலாற்றில் மிகவும் முக்கியம் வாய்ந்த நூலாக திகழ்கிறது.“உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு”, உள்ளதை உயர்த்தி கூறுவது “இலக்கியம்” ஆகும். நந்திகலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் அரசியல் தொடர்பான செய்திகள் அதிகம் மிகுந்துள்ளது.

இலக்கியத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாற்றுச் செய்திகளை புறத்துறைகள் வாயிலாகவும், தலைவி தன் மகிழ்ச்சியை கூறுவதாக அமைந்து அகப்பொருள் சுவையுடன் விளங்குகிறது.


நந்திக்கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாறு குறித்த கல்வெட்டு, செப்பேடு செய்திகளும், நந்திகலம்பகத்தில் உள்ள செய்திகளும் ஒன்றாக இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நந்திக் கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் “கொடைச் சிறப்பு, தமிழ் பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற பண்புகளுடன் நந்திக்கலம்பகத்தில் மேலும் போற்றப்படுகிறது.

 

நந்திக்கலம்பகம் மேற்பார்வை:

தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று தான் நந்திக்கலம்பகம். இது காஞ்சியைத் தலைநகரகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் “தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்”குறித்து பாடப்பட்டுள்ளது. மூன்றாம் நந்திவர்மனின் காலம் கிபி-825-850 ஆகையால் நந்திக் கலம்பகத்தின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு ஆகும். நந்திக்கலம்பகத்தில் காஞ்சி, மல்லை (மகாபலிபுரம்), மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாக போற்றப்பட்டுள்ளதுு.

ஆனால் சிறந்த சொற்சுவை, பொருட்சுவையோடு விளங்கிய இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


நந்திக்கலம்பகம் நூல் அமைப்பு:

கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 எனும் அளவில் கலம்பக பாடல்கள் அமைய வேண்டும் என்பது விதி. ஆனால் கலம்பகத்தில் மேற்கூறிய அளவுகளை மீறி பாடப்பட்டுள்ளது. நந்திக் கலம்பகத்தில் அகம், புறம் ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்றுள்ளது. ஆனால் இக் கலம்பகத்தில் அகத்திணைகள் பெருந்தன்மையாகவும், புறத்திணைகள் சிறு தன்மையாகவும் உள்ளது. நந்திக்கலம் மொத்தம் 144 பாடல்கள் உள்ளன. ஆனால் அரசர் மீதுு பாடப்படும் கலம்பக பாடல் 90 பாடல்கள் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே இதில் உள்ள 54பாடல்கள் பிற்காலத்தில் எழுதி சேர்க்கப்பட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

 

நந்திக்கலம்பகம் கூறும் செய்திகள்:

இந்நூலில் நந்திவர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றிக் கூறும் 16 பாடல்கள் சிறப்பாக கூறுகின்றன. கொற்ற வாயில் முற்றும், விரியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்கள் பற்றிி கூறும் அளவுக்கு சிறப்பு மிக்கது.

 

நந்திக் கலம்பகத்தில் இடம் பெறும் முக்கிய வினா-விடை தொகுப்பு:

* தமிழில் உருவான முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்.

* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்.

* நந்திக் கலம்பகத்தின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு.

* கலம்பகம் பிரித்து எழுதுக கலம்+பகம்.

* கலம் என்றால் 12 என்று பொருள்.

* பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள்.

* கலம்பகம் என்ற பெயர் வரக் காரணம் 18 இலக்கிய உறுப்புகள் சேர்ந்து வருவது கலம்பகம் ஆகும்.

 

* கலம்பகத்தின் உறுப்புக்கள்

1. புய வகுப்பு 

2.தவம்

3. அம்மானை

4. வண்டு

5. ஊர்

6. ஊசல் 

7. பாண் 

8. மதங்கு 

9.மடக்கு 

10. கைக்கிளை

11. சிந்து

12. கிளி

13. மறம்

14. காலம்

15. இரங்கல்

16. சம்பிரதம்

17. கார்

18. தூது 

தமிழுக்காக உயிரை விட்ட பல்லவ மன்னன் “நந்திவர்மன்”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *