Categories
Uncategorized

கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்.

 

முதல் குலோத்துங்கச் சோழரின் அரசவைப் புலவராகத் திகழ்ந்த பரணிக்கோர் செயங்கொண்டார் என பலபட்டடை சொக்கநாத புலவரால் பாராட்டப்பட்ட மற்றும் இசையாயிரம், உலா மடல் ஆகிய நூல்களைைை இயற்றிய ஜெயங்கொண்டார் இயற்றிய நூலான “கலிங்கத்துப்பரணி”பற்றிி சற்று விரிவாக இங்கே காணலாம்.

ஜெயங்கொண்டார் கிபி 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

பரணி என்பது ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனை புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு “பரணி என்று பொருள்”. கலிங்கத்துப்பரணிிிிி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும்.

பரணி இலக்கியங்களில் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி ஆகும்.

 

கலிங்கத்துப்பரணி நூலமைப்பு:

கலிங்க மன்னன் அனந்தப்பன் மண்மீது முதல் குலோத்துங்க சோழன் போர் தொடுத்து வெற்றி பெற்றான். வெற்றியை பாராட்டி பாடும் நூல் மேலும் தோல்வியுற்ற கலிங்க நாட்டின் பெயரால் அமைந்துள்ளதால் இந்நூலினை கலிங்கத்துப்பரணி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன. ஜெயங்கொண்டார் இன் சமய காலப் புலவரான ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப் பரணியை “தென்தமிழ் தெய்வ பரணி”  என்று பாராட்டி உள்ளார்.

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி சிறப்பு பார்வை:

முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகர தொண்டைமான் வடகலிங்க மன்னன்  அனந்த் அவன் மண்ணை வென்ற வீரத்தைப் பற்றிப் பாடுகிறது.

 

ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப் பரணி சிறப்பு பார்வை:

முதலாம் குலோத்துங்கனின் மகன் விக்கிரம சோழன் தென் கலிங்க மன்னன் கலிங்க வீமனை என்ற பாடலை பாடுகிறது. மேலும் இந்நூல் நமக்கு கிடைக்கவில்லை.

கலிங்கத்துப்பரணி முக்கிய வினா விடைகள்:

* கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.

* கலிங்கத்துப்பரணி ஒரு 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

* பரணி இலக்கியங்களில் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி.

* கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகள் எத்தனை 599 தாழிசைகள் உள்ளன.

* செயங்கொண்டார் வாழ்ந்த காலம் கிபி 12ஆம் நூற்றாண்டு.

* முதல் குலோத்துங்க சோழனின் அரசவையில் புலவராக திகழ்ந்தவர் செயங்கொண்டார்.

* அறிஞர் அண்ணாவிற்கு பிடித்து இலக்கியங்களில் ஒன்று கலிங்கத்துப் பரணியை என்பர்.

* ஜெயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி, திருவாரூர் மாவட்டம்.

* ஜெயங்கொண்டார் இயற்றிய நூல்கள் பின்வருமாறு:

இசையாயிரம், உலாமடல்.

* பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் ஜெயங்கொண்டார் எவ்வாறு பாராட்டியுள்ளார் பரணிக்கோர் ஜெயங்கொண்டார்.

* பரணி இலக்கியங்கள் பின்வருமாறு:

தக்கயாகப் பரணி, இரணியன் வதைப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப் பரணி, திராவிடத்து பரணி, வங்கத்து பரணி, சீனத்து பரணி, திருச்செந்தூர பரணி, சூரன் வதைப் பரணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *