மணிமேகலை காப்பியம் முக்கிய கொள்குறி வினா விடைகள்:
* மணிமேகலை நூலின் ஆசிரியர் பெயர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
* சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர் சாத்தன்.
* சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார். மேலும் மதுரையில் வாழ்ந்தார்.
* சீத்தலைை சாத்தனார் மதுரையில் செய்து வந்த தொழில் கூலவாணிகம்.
* கூலம் என்பதன் பொருள் தானியம்.
* ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் சமகாலத்தவர்கள் இளங்கோவடிகள் மற்றும் சீத்தலைச் சாத்தனார்.
* இளங்கோவடிகள் சீத்தலைச் சாத்தனார் ஐ எவ்வாறு புகழப்படுகிறார் தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற் புலவன்.
* தண்டமிழ் ஆசான் என அழைக்கப்படுபவர் சீத்தலைச் சாத்தனார்.
* தண்டமிழ் ஆசான் என சீத்தலைச் சாத்தனார் பாராட்டியவர் யார் இளங்கோவடிகள்.
* மணிமேகலை காப்பியம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது கிபி 2 ஆம் நூற்றாண்டு.
* மணிமேகலைக் காப்பியம் எந்த சமயத்தைச் சார்ந்தது பௌத்தம் சமயம்.
* மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள மொத்த அடிகள் 4286 அடிகள்.
* மணிமேகலை காப்பியம் எந்த பா வகையை சார்ந்தது ஆசிரியப்பா.
* மணிமேகலைக் காப்பியத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை மொத்தம் 30 காதைகள் உள்ளன.
* மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் முதல் காதையின் பெயர் விழாவரை காதை.
* மணிமேகலைை காப்பியத்தில் இடம்பெறும் கடைசி காதையின் பெயர் பவத்திறம் நோற்ற காதை.
* காப்பியத் தலைவி பெயரில் அமைந்த முதல் காப்பியம் மணிமேகலை காப்பியம்.
* காப்பியத்தின் வேறு பெயர்கள் துறவுக் காப்பியம், மணிமேகலைத் துறவு.
* துறவுக் காப்பியம் என அழைக்கப்படும் காப்பியம் மணிமேகலை.
* மணிமேகலைக் காப்பியத்தில் முதன் முதலில் பதிப்பித்தவர் மு. சண்முகம் பிள்ளை.
* மணிமேகலை காப்பியத்தின் தலைவி மணிமேகலை.
* மணிமேகலை காப்பியத்தின் தலைவன் உதயகுமாரர்(ராசம்மா தேவியின் மகன்).
* மணிமேகலையின் தோழியின் பெயர் சுதமதி.
* மணிமேகலையின் முற்பிறப்பு கணவனின் பெயர் இராகுலன்.
* மணிமேகலையின் முற்பிறப்பு பெயர் இலக்குமி.
* மணிமேகலையின் பழம் பிறப்பை அவளுக்கு உணர்த்திய நூல் புத்த பீடிகை.
* மணிமேகலையை தூக்கிச்சென்ற தெய்வம் பெயர் மணிமேகலை தெய்வம்.
* மணிமேகலையை தெய்வம் கொண்டு சென்ற தீவு மணிபல்லவத் தீவு.
* மணிமேகலையின் அமுதசுரபியில் முதல் முதலில் பிச்சை இட்டனர் ஆதிரை.
* உதயகுமார் எனக்கு பயந்து மணிமேகலை எடுத்த உருவத்தின் பெயர் காயசண்டிகை.
* கிளைக் கதைகள் அதிகம் கொண்ட காப்பியத்தின் பெயர் மணிமேகலைக் காப்பியம்.
* மணிமேகலை யார் அருள் வரம் பெற்றவள் அறவண அடிகள்.
* சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியவள் மணிமேகலை.
* மணிமேகலை காப்பியத்தை பற்றி வா. அ.பா. மாணிக்கம் எவ்வாறு கூறுகிறார் பரந்தை ஓழிப்பு, மது ஒழிப்பு, சிறை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்றெண்ணியே சமுதாய சீர்திருத்தங்கள் -ன் களஞ்சியம் மணிமேகலை காப்பியம் ஆகும்.
* மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் சிறந்த அடிகள் பசிப்பிணி என்னும் பாவி.
* மணிமேகலையில் இடம்பெறும் முக்கிய வரிகள்
மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலர் காவல் இன்றெனின் இன்றான்.
* மணிமேகலை காப்பியம் எவ்வகை காப்பியம் சொற்சுவை, பொருட்சுவை, இயற்கை வருணனை சார்ந்தது.
* மணிமேகலா தெய்வத்திடம் மணிமேகலை பெற்ற வரம் (3 மந்திரம்) பசியற்ற இருக்க, வான்வழி செல்ல, விரும்பிய உருவம் எடுக்க.
* மணிமேகலைக்கு கிடைத்த அமுத சுரபி முற்பிறப்பில் யாரிடம் இருந்தது ஆபுபுத்திரன் இடம் இருந்தது.
One reply on “மணிமேகலை காப்பியம் – முக்கிய கொள்குறி வினா விடைகள்”
Nice sir