Categories
Uncategorized

ஐம்பெருங்காப்பியங்கள் நூல் விளக்கம்

 

ஐம்பெருங்காப்பியங்கள்:

* சிலப்பதிகாரம்

* மணிமேகலை

* சீவக சிந்தாமணி

* வளையாபதி

* குண்டலகேசி

 

ஐம்பெருங்காப்பியங்களின் அணிகல பெயர்கள்:

ஐம்பெருங்காப்பியங்களின் நூலின் பெயர்கள் அணிகல பெயர்களால் அமைந்துள்ளன.

சிலப்பதிகாரம் சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி 

பொருள்:

கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு பற்றி கூறுகிறது.

 

மணிமேகலை ஆடை நழுவாமல் இருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி.

பொருள்:

இத்தொடர் அன்மொழித்தொகை ஆக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும் . இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு பற்றிக் கூறுகிறது.

 

சீவக சிந்தாமணி சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில் பதிக்கப்படும் மணிகள்).

பொருள்:

சீவகனை மணிமுடி ஆக்கி எழுதப்பட்ட வரலாறு பற்றி கூறுகிறது.

 

வளையாபதி வளையல் அணிந்த பெண்.

பொருள்:

வளையல் அணிந்த பெண்ணின் (வளையாபதி) வரலாற்றை கூறும் நூல்.

 

குண்டலகேசிகுண்டலம் என்பது மகளிர் அணியும் காது வளையம்.

பொருள்:

குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி. குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல்.

 

சிலப்பதிகாரம் நூல் குறிப்பு:

கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சேர நாட்டவரான இளங்கோவடிகள் என்னும் புலவரால் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.  சோழ நாட்டின் தலைநகரமான பூம்புகாரை சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும் அவனது மனைவி ஆகிய கண்ணகி ஆகியோரின் கதையை கூறுவதே சிலப்பதிகாரம் ஆகும்.

 

கோவலன் உடன் தொடர்பு கொள்கிறேன் நடன மாதன மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.

 அரசியல் பிழைத்தோர்க்கு அறம்

கூற்று ஆவதூஉம், 

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் 

ஏத்தலும்,

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் 

என்பதுவும்,

சூழ்வினைச் சிலம்பு காரணமாக 

சிலப்பதிகாரம் எனும் பெயரால்

நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச்

செய்யுள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களில் முழு காப்பியத்தின் முக்கிய குறிப்புகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

 

மணிமேகலை நூல் விளக்கம்:

மணிமேகலையின் கதைக்களன், கதை மந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

 

இக் காப்பியத்தில் வரும் மணிமேகலை சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மாதவியின் மகள் ஆவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்குப் பிறகு மாதவிி பொது வாழ்வில் இருந்தும் பொது கவலையில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் வாழ்ந்த காலத்தில் கடந்து வந்த வாழ்க்கை முறையையும் , நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களையும் எண்ணிி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வந்தால்.

 

அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மீது காதல் கொள்ள வே அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்தசமய துறவியானாள். அங்குுுு அவளுக்கு பசிப்பிணி போக்கும் அட்சயப் பாத்திரம் கிடைத்தது. அன்றுு முதல் மக்களின் பசியைப் போக்குவதை தன் கடமையாக  கொண்டு வாழ்ந்த மணிமேகலை அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

 

மணிமேகலை நூலில் இடம்பெறும் முக்கிய வரிகள்:

அறமேனப்படுவது

யாதெனக்கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு

எல்லாம்

உண்டியும் உடையும்  உறையுளும் 

அல்லது

கண்ட தில்லை.

 

சீவக சிந்தாமணி நூல் விளக்கம்:

தமிழ் இலக்கியத்தில் உள்ள மகா காப்பியங்களில் ஐம்பெரும் காப்பியம் ஆன சீவக சிந்தாமணி தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது  சமண புலவரான திருத்தக்க தேவர் இயற்றியுள்ளார்.

இது வாதிபசிம்ஹன் இன்  இஷ்த்திர சூடாமணியை பின்பற்றியது. அந்த மூல நூலே கிபிிி 898 ஆம் ஆண்டு குணப் பத்திரன் எழுதிய உத்தர புராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

சிந்தாமணியே தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமயப் புராணங்களில் தொன்று தொட்டு நிலவி வரும் கதைகளை ஜனரஞ்சகமாகஉம், இனக்கவர்ச்சி உடனம்,கற்பனைஉடனும் எழுத திருத்தக்கதேவர்  விரும்பினார் மேலும் அம்முயற்சியில்  வெற்றியும் கண்டார்.

 

நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணியில் ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் கொண்ட 3141 செய்யுட்கள் உடையன. ஆசிரியர் 2700 செய்திகளை மட்டுமே இயற்றினார் என்பது ஆய்வுகள் அறிவிக்கின்றன.மீதமுள்ள 445 செய்யுட்கள் அவருடைய குருவாலும் மற்றும் வேறு ஒருவராலும் எழுதப்பட்டவை என அறியப்படுகிறது. இதில் இரண்டு செய்யுட்களை இவர் குருவே எழுதியுள்ளார் என்பதை சுட்டிக் காட்டுகிறார் கவிஞர். ஏனைய செய்யுட்களை எழுதிய விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் பெரியபுராணம் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி நேரடியாக காரணம் இல்லை. ஆனால் பெரியபுராணம் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

 

வளையாபதி நூல் விளக்கம்:

ஒன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாக கருதப்படும் வளையாபதி ஒரு சமண சமயத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூலை எழுதியவர் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தற்காலத்தில் இந் நூலினைப் பற்றி விவரம் கிடைக்கவில்லை இன் நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் கிடைத்துள்ள பாடல்களைக் கொண்ட இந்நூல் இலக்கிய சுவைகளும் கவிதைகளாலம் கொண்ட பாடல்களால் அமைந்தது எனக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து கருத்துக்களை மட்டுமின்றி சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தி உள்ளமை. இது கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும்போது தெரிகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

 

குண்டலகேசி நூல் குறிப்பு :

குண்டலகேசி ஒரு பௌத்தம் சமயத்தைச் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள்  உரைகளில் குண்டலகேசி பாடல்களை எடுத்தாண்டு உள்ளார்கள். மேலும் இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் வெவ்வேறு நூல்களிலிருந்து கிடைத்தவை. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.

 

தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி எனும் வணிக குல பெண்ணொருத்தியின் கதையே இக்காப்பியம் ஆகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *