Categories
Uncategorized

TNUSRB POLICE EXAM CURRENT AFFAIRS AUGEST 2020

TNUSRB AUGEST 2020 CURRENT AFFAIRS:

POLICE EXAM MATERIALS

1. நிதி ஆயோக் NITI AAYOG வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை Epi 2020 இல் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடு 

* இரண்டாவது இடம் மகாராஷ்டிரா

* முதலிடம் குஜராத்

 

2. தமிழ்நாட்டில் உள்ள எந்த மண்டலம் இந்தியத் தொல்பொருள் சர்வேயேன் புதிய வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மண்டலம்.

 

3. தூய்மை பாரதம் திட்டத்தை செயல்படுத்துவதில் அகில இந்திய அளவில் திருநெல்வேலி மாநகராட்சி 159 வது இடத்துடன், மாநில அளவில் 2(இரண்டாவது) இடத்தைப் பிடித்தது எனில் முதல் இடத்தைப் பெற்றுள்ள மாநகராட்சிி

விடை:  திருச்சி அகில இந்திய அளவில் 102 இடத்தை பிடித்துள்ளது.

 

4. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி எவ்வாற அழைக்கபடுகிறது கோவிஷி இல்டு.

 

5.தமிழக அரசின் வீர தீர செயலுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான “ஜீவன் ரக்ஷa பதக்” விருது பெற்றவர் யார்  ஆர். ஸ்ரீதர்

 

6. தேசிய நல்லாசிரியர் விருது 2020 ஆம் ஆண்டில் பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் யார்  சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் திலீப் , சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியை சரஸ்வதி.

 

7.தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனர் அந்தஸ்துடன் தனி அமைப்பாக செயல்படும் என தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி இனி எவ்வாறு அழைக்க வேண்டும். போலீஸ் அகாடமியின் இயக்குனர்.

 

8. தூய்மையான நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது பத்தாவது இடம்.

 

9. Covid-19 தொடர்பான அழுத்த கடன்களை தீர்ப்பதற்கான விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை செய்ய யாருடைய தலைமையிலான குழவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது கேவி காமத் (அழுத்த கடன் கமிட்டி).

 

10. இந்தியாவின் முதல் கிசான் ரயில்/விவசாய ரயில் சேவை எங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா.

 

11. ஆலந்தூர் மெட்ரோ என்பது “அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ” என்றும், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் என்பது “புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ”என்றும் மாற்றப்பட்டுள்ளது எனில் புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் என்பது தற்போது யாருடைய பெயரில் மாற்றப்பட்டுள்ளது  புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ.

 

12. கேரள மாநிலத்தின் முதல் கடல் ஆம்புலன்ஸ் பெயர் பிரதிக்க்ஷ.

 

13. இந்தியாவில் குரோன் நோய் தொற்று தடுப்பூசி உருவாக்குவது மற்றும் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தின் பெயர்  covid சுரக்ஷா திட்டம்.

 

14. இந்தியாவின் மிக நீளமான ரோட்வே திட்டமான பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள “குவகாத்தி  பயணிகள் ரோட்வே  திட்டம்”பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எப்பொழுது திறக்கப்பட்டது 24.08.2020

 

15. புதிய கல்விக் கொள்கையை நாட்டிலேயே முதன்முறையாக  அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் கர்நாடகம்.

 

16. தேசிய நெடுஞ்சாலையில் மரம் வளர்ப்பை கண்காணிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியின் பெயர் பசுமை பாதை.

 

17. Covid-19 நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோ கேமின் பெயர் கோரோனோ பைட்டர்ஸ்.

 

18. டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு 2020 digital quality of life index இல் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது 57 வது இடம்.

 

19. இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட முதல் பிளாக்கா ரக ராக்கெட்டுகள் எங்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது ராஜஸ்தானின் பொக்ரானில்.

 

20. இந்தியாவின் தூய்மையான முதல் நகரம் என்ற பெருமையை தொடர்ந்து 4 முறை வென்று சாதனை படைத்துள்ள மாநிலம் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர்.

 

21. உயர்கல்வி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மற்றும் சாதனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியலில் 2020இல் முதலிடம் பெற்ற கல்வி நிறுவனம் ஐஐடி சென்னை.

 

22. உத்திரப்பிரதேசத்தில் உள்ள    மாண்டுவாடி ரயில் நிலையத்தின் பெயர் தற்போது எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது பனாரஸ் ரயில் நிலையம்.

 

23. இயற்கை விவசாயத்திற்கு மாறிய உலகின் முதல் மாநிலம் சிக்கிம்.

 

24. உலகின் மிக உயரமான (141 மீட்டர்) சுவர் தூண் பாலம் இந்திய ரயில்வேயின் ஆல் மணிப்பூர் மாநிலத்தின் எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது எல்ஜாய் நதி.

 

25. நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விரிவான தகவல்களை பெறுவதற்கான வலைத்தள பக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது அவ் வலைத்தள பக்கத்தின் பெயர்  இஸ்வஸ்தியா.

 

26. வீட்டுவசதி கட்டுமானத்துறை நோக்கிய பெண்களின் திறமையை மேம்படுத்துவதற்காக எந்த பெயரிலான திட்டத்தை ஐரோப்பிய நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது நிர்மன்ஸ்ரீ.

 

27. கர்மா சாதி பிரகல்பா எனும் பெயரில் ஒரு லட்சம் வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் மானியத்தை வழங்கும் திட்டத்தை எந்த அரசு அறிவித்துள்ளது மேற்கு வங்க அரசு.

 

28. இந்திய கடலோர காவல் பணிக்காக புதிய ரோந்து கப்பல் கோவாவில் இந்திய நாட்டிற்கு 13.08.2020 அன்று அர்ப்பணிக்கப்பட்டது. அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் பெயர்  சர்தாக்.

 

29. இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் நான்காவது இடத்தையும் காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் களில் முதலிடம் பெற்றவர் நரேந்திர மோடி.

 

30. கோவாவின் தற்போது புவியியல் குறியீடு பெற்றுள்ள பொருள் ஹார்மன் மிளகாய்.

 

31. கோபி t110 தடுப்பூசி கொள்முதல் நிர்வாகத்திற்கான தேசிய அளவிலான வல்லுநர் குழுவை மத்திய அரசு யாருடைய தலைமையில் அமைத்துள்ளது நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி. கே. பால்.

 

32. குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கிய நாள் 11.08.2020

 

33. இந்திய ரயில்வேயின் தூய்மைவாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது  ஆகஸ்ட் 10 முதல் 15 தினங்களில்.

 

34. நாட்டிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கும் திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வழி வசதி வழங்கும் திட்டத்தை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வழங்கி வைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

 

35. 6 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அறிவியலை பிரபலப்படுத்துவதற்காக திட்டத்தின் பெயர் வித்யார்த்தி விஜயன் மந்தன் 2020-2021.

 

36. mobile infection testing and reporting (MITR) என்ற பெயரில் இந்தியாவின் முதல் நடமாடும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகம் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பெங்களூர் (கர்நாடக மாநில அரசால் அறிமுகம் படுத்தப்பட்டது).

 

37. உள்நாட்டில் தயாரான பிளாஸ்மிட் டிஎன்ஏ அடிப்படையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் பெயர்  ஜைகோ டி தடுப்பூசி.

 

38. தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் இயக்குனர் இப்ராகிம் ஆல்காசி 04-08-2020 அன்று காலமானார் இவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் இந்திய நாடகக்கலையின் தந்தை.

 

39. சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தும் உலகில் முதல் 20 நகரங்களில் 16வது இடத்திலும், இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள நகரம் ஹைதராபாத் நகரம்.

 

40. உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தின் கட்டுமான பணியை கட்டி முடிக்க இந்திய ரயில்வே எந்த ஆண்டுக்குள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 2021 ஆம் ஆண்டுக்குள்.

 

41. இ- ரக்ஷாபந்தன் என்ற பெயரில் இணைய குற்றங்களை கண்டு பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலான திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் ஆந்திர மாநிலம்.

 

42. எந்த நாடுகளுக்கு இடையே கலாச்சார ஒப்பந்தம் 20.08.2020 அன்று கையெழுத்திடப்பட்டது இந்தியா மற்றும் இஸ்ரேல்.

 

43. அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் உயர்நிலை உபகரணங்களை புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உடன் எந்த நாடு பகிர்ந்துள்ளது இஸ்ரேல்.

 

44. ஆறாவது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூடுகை இணையவழியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய நாடு ரஷ்ய நாடு.

 

45. உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறிய எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சோதனையின் பெயர் சலிவா டைரக்ட்.

 

46. ஸ்புட்னிக் வி என்ற பெயரில் நாவல் கொரோனா வைரசுக்கு எதிரான ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கிய உலகின் முதல் நாடு ரஷ்யா.

 

47. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகம் கிடங்கில் சுமார் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்ட எந்த மருந்து வைத்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது அமோனியம் நைட்ரேட்.

 

48. ரிசர்வ் வங்கி தனது 2019 – 2020 ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் 2020-2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சதவீதம் எவ்வளவு இருக்கும் என கணித்துள்ளது( – 4.5 சதவீதம்).

 

49. உலகின் மிக வேகமான மனிதக் கணினி எனும் பட்டத்தை வென்றவர் நீல காந்த பானு பிரகாஷ் (ஹைதராபாத்).

 

50. தேசிய விளையாட்டு துறை விருதுகள் 2020 இல் கேல் ரத்னா பட்டம் வென்ற தமிழக வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.

 

51. டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான விருது 2020 இல் யாருக்கு வழங்கப்பட்டது ஆர் எஸ் பரோடா. (இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர்).

 

52. எல்லை பாதுகாப்பு படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராக்கேஷ் அஸ்தானா.

 

53. மத்திய குடிமைப்பணி தேர்வு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி.

 

54. இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் ஜி. சி. மூர்மு.

 

55. தேசிய விளையாட்டு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது ஆகஸ்ட் 29.

 

56. சர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.

 

57. செரஸ் பெறும் குறும்கோளுக்கு ஆராய்ச்சியாளர்கள் எந்த அந்தஸ்தை வழங்கி உள்ளனர் பெருங்கடல் உலகம்.

 

58. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் மூன்றாண்டு பதவி நிறைவை அனுசரிப்பு அதற்காக வெளியிட்ட புத்தகத்தின் பெயர் connecting,communicating,changing.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *