திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்

 


சிவபெருமானின் திருவிளையாடல்களை கூறும் திருவிளையாடல் புராணம் நூலினை பரஞ்சோதி முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும் சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்கள் இன் தொகுப்பாக இந்நூல் அமையப்பெற்றுள்ளது.

திருவிளையாடல் புராணம் ஆசிரியர் குறிப்பு:

மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாக திருமறைக்காடு (வேதாரண்யம்) எனும் ஊரில் இப் புராணத்தை இயற்றிய பரஞ்சோதி முனிவர் பிறந்தார். மேலும் இவர் மதுரையில் சற்குருவை ஏற்று சைவ சந்நியாசம் பெற்றார். இவர் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது "மதுரை மீனாட்சியம்மை பராசக்தி"கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல் பாடல்கள் பற்றி பாடும் படி கூறியதால் இந்நூலை பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டதுுு என நம்பப்படுகிறது.


பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேறு நூல்கள்:

திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம்.

மேலும் பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த காலம் கி பி பதினாறாம் நூற்றாண்டு என்பர்.


திருவிளையாடல் புராணம் நூல் அமைப்பு விரிவான விளக்கம்:

மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல் பற்றி ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் வியாசர் இயற்றிய கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்திி தேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றிி சொன்னார் எனவும் அதை வியாசருக்குு சனத்குமாரர் சொன்னார் எனவும் ,  அதனை வியாசர் ஸ்கந்த புராணத்தில்  எனவும் கூறப்படுகிறது.

ஹோலாஷ்ய மகாத்மியம் எனும் நூலை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல் தமிழுக்கே உரிய தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடிவமைத்தார். இதில் உள்ள முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகரத்தின் சிறப்பினைை உள்ளடக்கியது.

மேலும் 344 வது செய்யுள் முதல் சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பம் ஆகிறது.


திருவிளையாடல் புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை :

திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மதுரை காண்டம் - 18 படலங்கள்.

கூடற் காண்டம் - 30 படலங்கள்

திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள்.


திருவிளையாடல் புராணத்தில் உள்ள காப்பிய உறுப்புகள் பெயர்கள் பின்வருமாறு:

1. காப்பு

2. வாழ்த்து

3. நூற்பயன்

4. கடவுள் வாழ்த்து

5. பாயிரம்

6. அவையடக்கம்

7. திருநாட்டுச் சிறப்பு

8. திருநகரச் சிறப்பு

9. திருக்கைலாய சிறப்பு

10. புராண வரலாறு

11. தல விசேடம்

12. தீர்த்த விசேடம்

13. மூர்த்தி விசேடம்

14. பதிகம்.


திருவிளையாடல் புராணத்தில் உள்ள படங்கள் பற்றி சிறு குறிப்பு:

முதல் பகுதியான மதுரை காண்டம் இந்திரன் பழி தீர்த்த படலம் முதல்வருடன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை 18 படலங்கள் கொண்டது.

அடுத்த கூடற் காண்டம் நான்மாடக்கூடல் ஆன படலம் முதல் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரையான படலங்களையும்.

மூன்றாவது பகுதியான திருவாலவாய்க் காண்டம் திருவாலவாய் ஆன படலம் முதல் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் வரை கொண்டது.



திருவிளையாடல் புராணத்தில் இடம் பெறும் 64 திருவிளையாடல்கள் பெயர்கள்:

1. இந்திரன் பழி தீர்த்த படலம்

2. வெள்ளை யனை சாபம் தீர்த்த படலம்

3. திருநகரம் கண்ட படலம்

4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்

5. தடதகையாரின் திருமணப் படலம்

6. வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்

7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்

9. ஏழுகடல் அழைத்த படலம்

10. மலையத்துவசன் அழைத்த படலம்

11. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்

12. உக்கிர குமாரனுக்கு வேல்வலை செண்டு கொடுத்த படலம்

13. கடல் சுவற வேல் விட்ட படலம்

14. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம்

15. மேருவை செண்டால் அடித்த படலம்

16. வேதத்திற்கு பொருள் அருளிச்செய்த படலம்

17. மாணிக்கம் விற்ற படலம்

18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்

19. நான்மாடக்கூடல் ஆன படலம்

20. எல்லாம்வல்ல சித்தரான படலம்

21. கல் யானைக்கு கரும்பு தந்த படலம்

22. யானை எய்த படலம்

23. விருத்த குமார பாலாரன படலம்

24. கால் மாறி ஆடிய படலம்

25. பழி அஞ்சின படலம்

26. மாபாதகம் தீர்த்த படலம்

27. அங்கம் வெட்டின படலம்

28. நாகம் எய்த படலம்

29. மாயப் பசுவை வைத்த படலம்

30. மெய் காட்டிட்ட படலம்

31. உலவாக்கிழி அருளிய படலம்

32. வளையல் விற்ற படலம்

33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்

34. விடை இலச்சினை விட்ட படலம்

35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

36. இரசவாதம் செய்த படலம்

37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

39. மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

40. வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

41. விறகு விற்ற படலம்

42. திருமுகம் கொடுத்த படலம்

43. பலகை இட்ட படலம்

44. இசை வாது வென்ற படலம்

45. பன்றி குட்டிக்கு முலை கொடுத்த படலம்

46. பன்றிக்குட்டிகளை மந்திரிகள் ஆகிய படலம்

47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

48. நாரைக்கு முத்தி கொடுத்த படலம்

49. திருவால வாயான் படலம்

50. சுந்தரப் பேரன் செய்த படலம்

51. சங்கப்பலகை கொடுத்த படலம்

52. தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்

53. கீரனைக் கரையேற்றிய படலம்

54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

57. வலை வீசின படலம்

58. வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்

59. நரி பரியாக்கிய படலம்

60. பரி நரியாக்கிய படலம்

61. மண் சுமந்த படலம்

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

63. சமணரைக் கழுவேற்றிய படலம்

64. வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.


திருவிளையாடல் புராணம் நூல்"மதுரையின் தல புராணமாக போற்றப்படுகிறது"


திருவிளையாடல் புராணத்தில் இடம் பெறும் முக்கிய நான்கு புராணங்கள்:

1. திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் - பெரும்பற்றப்புலியூர் நம்பி.

2. கடம்பவன புராணம் - தொண்டை நாட்டு இலம்பூர் வீத நாத பண்டிதர்.

3. சுந்தரபாண்டியம் - தொண்டை நாட்டு வாயர்பதி அனதரியப்பன்.

4. திருவிளையாடல் புராணம் - பரஞ்சோதி முனிவர்.

Post a Comment

Previous Post Next Post