பெரியபுராணம்-சேக்கிழார்-நூல் விளக்கம்


சைவ காப்பியமான பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக அமைய பெற்ற "சேக்கிழார்"என்னும் புலவரால் இயற்றப்பட்ட "பெரியபுராணம்"அல்லது "திருத்தொண்டர் புராணம்"நூலை பற்றி விரிவாக இங்குு காணலாம்.


பெரியபுராணத்தின் கதைக்களம்:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை என்னும் நூலை முதல் நூலாக கொண்டு, சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பியத் தலைவனாகக் கொண்டு, அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றையும் இந்நூல் தெளிவாக விவரிக்கிறது.
மேலும் திருத்தொண்டத்தொகை , நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூல நூலாக கொண்டும் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார் பல ஊர்களுக்கும் சென்று திரட்டிய தகவல்களைக் கொண்டும் பெரிய புராணம் எழுதப்பட்டதுுு என்று குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையின் படி தில்லைக்கு சென்றவர் அங்குு இருக்கும் இறைவனான நடராஜன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க  சேக்கிழார் உலகெங்கும்் உணர்ந்து அதற்குு அரியவன் என பெரிய புராணத்தை தொடங்கியதாக நம்பப்படுகிறது.

மேலும் இந்நூல் இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கையைப் பற்றி வரலாற்றுப் போக்கில் அறிவதற்கு இந்நூல் பெரிதும் உதவுகிறது.

பெரியபுராணத்தின் காப்பிய பகுப்புமுறை:
பெரிய பராணத்தில் முதல் காண்டம், இரண்டாம் காண்டம் என இரண்டு காண்டம் ஆகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்கள், இரண்டாம் காண்டத்தில் எட்டு சருக்கங்கள் ஐயும் கொண்டுள்ளது.
மேலும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்களின்  முதல் வரிசையே சுருக்கங்களின் பெயர்களாக இடம்பெற்றுள்ளது.
பெரிய புராணக் கதையின் இறுதியாக காப்பிய கதையானது கைலாயத்தில் தொடங்கப் பெற்று சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து இறுதியாக கைலாயத்தில் முடிகிறது.

முதல் காண்டத்தில் இடம்பெறும் சருக்கங்கள் பெயர்கள்:
1. திருமலை சருக்கம்
2. தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
3. இலைமலிந்த சருக்கம்
4. மும்மையால் உலகாண்ட சருக்கம்
5. திருநின்ற சருக்கம்

இரண்டாம் காண்டத்தில் இடம்பெறும் சருக்கங்கள் பெயர்கள்:
1. வம்பறா வரிவண்டு சருக்கம்
2. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
3. பொய்யடிமையிலலாத புலவர் சருக்கம்
4. கறைக்கண்டன் சருக்கம்
5. கடல் சூழ்ந்த சருக்கம்
6. பத்தராய்ப் பணிவார் சருக்கம்
7. மன்னியசீர் சருக்கம்
8. வெள்ளானைச் சருக்கம்

பெரியபுராணத்தில் கூறும் பழமொழியின் விவரம்:
4286 செய்யுள்களை கொண்ட இப்புராணத்தில் ஆளுடைய பிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுள்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது ஆகையால் "பிள்ளை பாதி"புராணம் பாதி என பழமொழி அமையப் பெற்றது.


பெரிய புராணத்தில் இடம் பெறும் முக்கிய வினா-விடை தொகுப்பு:
* பெரிய புராணம் இயற்றிய ஆசிரியர் பெயர் சேக்கிழார்.
* சேக்கிழார் பிறந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்தார்.
* சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
* சேக்கிழார் எந்த அமைச்சரிடம் பணியாற்றினார் அனபாய சோழன் இடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார்.
* சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர் கிபி 12ஆம் நூற்றாண்டு.
* சேக்கிழாரின் இன்னொரு பெயர் உத்தம சோழ பல்லவர், தெய்வ சேக்கிழார் எனவும் அழைக்கப்படுகிறார்.
*சேக்கிழார் கட்டிய கோவிலின் பெயர் சொற் கோவில், கற்கோயில்.
* சேக்கிழார் எவ்வாறு அழைக்கப்படுகிறார் குன்றத்தூர் கவி கோமான் எனவும் அழைக்கப்படுகிறார்.
* அனபாய சோழன் சேக்கிழாருக்கு கொடுத்த பட்டத்தின் பெயர் தொண்டர்சீர் பரவுவார்.
* சேக்கிழார் புராணத்தை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார்.
* பெரியபுராணத்தின் வேறு பெயர்கள் திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் மாக்கதை.
* சேக்கிழார் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 72 புலவர்கள்.
* சேக்கிழார் பாடிய 72 புலவர்களில் 63 தனி அடியார்கள், 9 தொகையடியார்கள்.
* பெரிய புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை 2 காண்டங்கள் உள்ளன.
* பெரிய புராணத்தில் உள்ள பாக்களின் எண்ணிக்கை 4256 பாக்கள் உள்ளன.
* பெரிய புராணத்தில் உள்ள சுருக்கங்களின் எண்ணிக்கை 13 சுருக்கங்கள் உள்ளன.
* பெரிய புராணத்தில் இடம் பெறும் முதல் சருக்கத்தின் பெயர் திருமலை சருக்கம்.
* பெரிய புராணத்தில் இடம் பெறும் கடைசி சருக்கத்தின் பெயர் வெள் யானைச் சருக்கம்.
* தமிழின் முதல் கள ஆய்வு நூல் எது பெரியபுராணம்.
* பெரிய புராணத்தை சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என அழைத்தவர் மீனாட்சி சுந்தரனார்.
* இரண்டாவது தேசிய புராணமாக கருதப்படும் நூல் பெரியபுராணம்.
* திருத்தொண்டர் தொகையே இயற்றியவர் சுந்தரர்.
* திருத்தொண்டர் தொகை ஒரு தொகை நூல் ஆகும்.
* திருத்தொண்டர் திருவந்தாதி நூலை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி.
* திருத்தொண்டர் திருவந்தாதி ஒரு வகை நூலாகும்.
* திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் சேக்கிழார்.
* திருத்தொண்டர் புராணம் ஒரு விரிநூல் ஆகும்.
* பிறமொழிக் கலப்பின்றி தமிழுக்கே உரிய நூல் என அழைக்கப்படும் நூல் பெரியபுராணம்.
* பெரிய புராணத்தை பிள்ளை பாதி புராணம் பாதி என அழைக்கப்படுகிறது.
* பிள்ளை பாதியில் இடம்பெறும் பிள்ளை யார் திருஞானசம்பந்தர்.


Post a Comment

Previous Post Next Post