Skip to main content

சீவக சிந்தாமணி-திருத்தக்க தேவர்- முக்கிய கொள்குறி வினா விடைகள்

 


சீவக சிந்தாமணி முக்கிய கொள்குறி வினா விடைகள்:

* சிந்தாமணி என்பதன் பொருள் ஒலி குன்றாத மணி ஆகும்.

* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவனின் பெயர் சீவகன்.

* சீவகன் என பெயர் அமையக் காரணம் சீவகன் பிறந்த போது அவன் தாயை(விசயை) "சிந்தா மணியே"என அழைத்தார்.

* சீவகன் திரும்பியபோது என்ன ஒலி ஏற்பட்டது சீவகன் திரும்பியபோது சீவ என வாழ்த்தொலி ஏற்பட்டது. இதன் காரணமாக இவன் சீவகன் என அழைக்கப்பட்டான்.

* சீவகன் தாயின் பெயர் விசயை.

* சீவகனின் வரலாற்றை கூறுவதால்  காப்பியத்திற்கு சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது.

* சீவக சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்.

* சீவகசிந்தாமணியில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை 3145.

* சீவகசிந்தாமணியில் உள்ள பிரிவின் பெயர் இலம்பகம்.

* சீவகசிந்தாமணியில் உள்ள மொத்த  இலம்பகம் - 13.

* சீவக சிந்தாமணியில் இடம்பெறும் முதலில் இலம்பகத்தின் பெயர் நாமகள் இலம்பகம்.

* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் கடைசி இலம்பகத்தின் பெயர் முக்தி இலம்பகம்.

* சீவக சிந்தாமணி எந்த சமயத்தைச் சார்ந்தது சமண சமயம்.

* சீவக சிந்தாமணி நூலின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு.

* சீவக சிந்தாமணி எவ்வகை பா வகையை சார்ந்தது விருத்தப்பா பாவகை.

* திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தார்.

* சோழர் குடியில் பிறந்த முத்து என அழைக்கப்படுபவர் திருத்தக்க தேவர்.

* வீரமாமுனிவர் திருத்தக்கதேவர் - ஐ எவ்வாறு புகழ்ந்துள்ளார் தமிழ்ப் புலவர்களில் தலைமை சான்றவர் தேவர்.


*
சீவக சிந்தாமணியின் மற்றொரு பெயர் மணநூல்.

* சீவகசிந்தாமணி- ஐ மணநூல் என பெயர் அமையக் காரணம் சீவகன் எட்டு திருமணம் செய்ததால்மேலும் 13 இலம்பகம் உம் திருமணச் செய்தியை ஊடுருவி நிற்பதால் இதற்கு மணநூல் என பெயர் அமைந்தது.

* சீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள் மணநூல், முக்தி நூல், என்வரை மணந்த கதை, காம நூல்.

* சீவகசந்தாமணியை ஜி யு போப் எவ்வாறு பாராட்டியுள்ளார் தமிழ் இலக்கியத்தின் இலியட் ஒடிஸி.

* சீவகசிந்தாமணியில் இடம்பெறும் தலைவியின் பெயர்கள் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை(ஆகிய 8 பேர்கள் தான் சீவகன் திருமணம் செய்த மனைவிகள்).

* சீவகனின் தந்தையின் பெயர் சச்சந்தன்.

* சீவகனின் தாயின் பெயர் விசையை.

* சீவகனின் அமைச்சர் பெயர் கட்டியங்காரன்.

* சீவகனின் நண்பர்கள் பெயர் பதுமுகன், நந்தட்டன்.

* சீவகனை எடுத்து வளர்த்தவர் பெயர் கந்துக்கடன்.

* சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர்.

* சீவகனின் சிறப்பு பெயர்கள் திருத்தகு முனிவர், மகா முனிவர், தேவர்.



சீவக சிந்தாமணி நூல் உணர்த்தும் உண்மைகள்:

* அமைச்சரை ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.

* பெண்வழிச்சேறல் பெருந்துன்பம் விளைவிக்கும்.

* தன்ஆட்சியர் கட்டளைப்படி நடத்தல் வேண்டும்.

* பகையை வெல்ல காலமும், இடமும் வரும் வரை யாரிடமும்  தன் எண்ணத்தை வெளிப்படுத்த கூடாது.

* எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்.

* நன்றி மறவாத இருத்தல் வேண்டும்.





Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...