Categories
பழமொழி நானூறு மூலமும் உரையும் pdf

பழமொழி நானூறு – முப்பெரும் அற நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு தெளிவான விளக்கம்

 

கிபி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்க மருவிய கால தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சமண முனிவர்களால் இயற்றப்பட்ட என்ற பெருமைக்குரிய ஆசிரியர் மூன்றுறை அரையனார் என்பவரால் பாயிரமும் கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த (401) பாடல்களைக் கொண்ட நீதி நூலான (பழமொழி நானூறு) பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

 

பழமொழி என்றால் என்ன:

பழம் தின்ன சுவைப்பது, உன் பாரின் உடல் வளத்துக்கும் உதவுவது, இவ்வாறு கேள்விக்கு இனிதாகவும் அறிவிற்கு வளம் சேர்ப்பதாகவும் விிிலங்கும் அறிய வாக்குகளையே “பழமொழி”என்றழைக்கிறோம்.

இந்நூல் 34 தலைப்பில் அமைந்த பாடல்களை தன்னுள் கொண்டுள்ளது அப்பாடலைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.

1. கல்வி – 10 பாடல்கள்

2. கல்லாதவர் – 6 பாடல்கள்

3. அவையரிதல் – 9 பாடல்கள்

4. அறிவுடைமை – 8 பாடல்கள்

5. ஒழுக்கம் – 9 பாடல்கள்

6. இன்னா செய்யாமை – 8 பாடல்கள்

7. வெகுளாமை – 9 பாடல்கள்

8. பெரியோரை பிழையாமை – 5 பாடல்கள்

9. புகழ்தல்லின் கூறுபாடு – 4 பாடல்கள்

10. சான்றோர் இயல்பு –12 பாடல்கள்

11. சான்றோர் செய்கை – 9 பாடல்கள்

12. கீழ்மக்கள் இயல்பு – 7 பாடல்கள்

13. கீழ்மக்கள் செய்கை –17 பாடல்கள்

14. நட்பின் இயல்பு –10 பாடல்கள்

15. நட்பில் விலக்கு – 8 பாடல்கள்

16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல் – 7 பாடல்கள்

17. முயற்சி – 13 பாடல்கள்

18. கருமம் முடித்தல் – 15 பாடல்கள்

19. மறை பிறர் அறியாமை – 6 பாடல்கள்

20. தெரிந்து செய்தல் – 13 பாடல்கள்

21. பொருள் – 9 பாடல்கள்

22. பொருளைப் போற்றுதல் -8 பாடல்கள்

23. நன்றியில் செல்வம் – 14 பாடல்கள்

24. ஊழ் –14 பாடல்கள்

25. அரசியல்பு  – 17 பாடல்கள்

26. அமைச்சர் –8 பாடல்கள்

27. மன்னரைச் சேர்ந்தொழுகல் – 19 பாடல்கள்

28. பகை திறன் –26 பாடல்கள்

29. படைவீரர் –16 பாடல்கள்

30. இல்வாழ்க்கை –21 பாடல்கள்

31. உறவினர் –9 பாடல்கள்

32. அறம் செய்தல் –15 பாடல்கள்

33. ஈகை –15 பாடல்கள்

34. வீட்டு நெறி –13 பாடல்கள்

 

புராணங்களைப் பற்றி பழமொழி நானூறு எவ்வாறு விளக்குகிறது:

பொலந்தார் ராமன் தன்  துணையாக தான் போந்து (பாகம் -258) இராமாயணம்.

அரக்கிலுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (பாகம் -235) பாரதம்.

உலகந்தாவிய அண்ணலே (பாகம்  -178) உலகம் அளந்த வாமனன்.

 

பழமொழி நானூற்றில் இடம்பெறும் வரலாற்றுக் குறிப்புகள்:

நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பாகம் – 7) கரிகால் சோழன்.(சுடுபட்டு உய்ந்த சோழன் மகனும்)

தீயினால் கொளுத்தப்படும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட் சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்.

குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்(முல்லைக்குத் தேரும் மயிலுக்கு போர்வையும் (பாகம்-75) .

 

பழமொழி நானூறில் இடம்பெறும் முக்கிய பழமொழிகள் சில:

* கற்றலின் கேட்டலே நன்று.

* முள்ளினாள் முள் களையுமா.

* ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.

* திங்களை நாய்க் குறைத்ன்று.

* இறைத்தோறும் ஊறும் கிணறு.

* பாம்பறியும் பாம்பின் கால்.

* கடன் கொண்டும் செய்வார் கடன்.

* குன்றின் மேல் இட்ட விளக்கு.

* தனிமரம் காடாதல் இல்.

* நுணலும் தன் வாயால் கெடும்.

* அணியல்லாம் ஆடையின் பின்.

 

பழமொழி நானூறு முக்கிய குறிப்புகள்:

* பழமொழி நானூறு பாவகை செப்பல் ஓசை

* பழமொழி நானூறு இயற்றிய ஆசிரியரின் மற்றொரு பெயர் மூன்றையர் (பாண்டிய நாட்டில் உள்ள ஓர் ஊர்)

* மூன்றுறை அரையனார் என்பதன் பொருள் மூன்றுரை –அவர் பிறந்த ஊர், அரையன் – அரசன் அல்லது குடிப்பெயர்.

* பழமொழி நானூறு எனப் பெயர் பெற காரணம் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி சொல்லப்பட்டுள்ளதால் “பழமொழி நானூறு”எனப் பெயர் பெற்றது.

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள முப்பெரும் அறநூல்கள் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு.

* தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி”என்று அழைக்கிறார்.

* பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூற்றில் வருகிறது.

* பழமொழி நானூறு முதலில் பதிப்பித்தவர் செல்வசேகரன் முதலியார்.

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகுதியான வரலாற்றுக் கூறுகளை குறிக்கும் நூல் பழமொழி நானூறு.

* ஆற்றுணா வேண்டுவது இல் இதில் குறிப்பிடப்படும் ஆற்றுணா ஆறு + ஊணா இன்றும் ஆறுு என்பதன் பொருள்  வழி எனவும்,  ஊணாஎன்பதன் பொருள் உணவு.

* பண்டைய காலத்தில் வழிநடை உணவை கட்டுச் சோறு என்று அழைப்பார்கள்.

 

பழமொழி நானூற்றில் வேறு பெயர்கள்

மூதுரை

முதுசொல்

முதுமொழி

உலக வசனம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *