பாவலர்ரோடு காவலரும் கைகோர்த்து கவிபுனைந்து கன்னித் தமிழ் வளர்ந்த காலம் சங்க காலம்.
அக்காலத்தில்தான் பழங்காலத்தில் தோன்றி வளர்ந்த தமிழ் இலக்கியங்களில் அறிந்து மறைந்தவை போக எஞ்சியவை காக்கப்பட்டு புலவர்களும், புரவலர்களும் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டது.
சங்க இலக்கியங்கள் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவையே பதினெண் மேற்கணக்கு நூல்கள் ஆகும்.
அதிக அடிகளைக் கொண்ட அகவல் முதலியவற்றால் ஆகிவரும் பாக்களின் தொகுதி பதினெண் மேற்கணக்கு நூல்கள்.
எட்டுத்தொகை நூல்கள்:
நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பத்துப்பாட்டு நூல்கள்:
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவைகளே பதினெண்மற்கணக்கு நூல்கள் ஆகும்.
இதைப்போன்றே தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வந்த காலம் சங்கம் மருவிய காலம் அதாவது “இருண்ட காலம்”.
இருண்ட காலம் (சங்கம் மருவிய காலம்) அதாவது களப்பிரர்கள் ஆட்சி செய்த காலம் மேலும் தமிழ்நாட்டில் புற சமயங்களான சமணமும் பௌத்தமும் மேலோங்கி இருந்த காலம்.
அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்தான் சங்கம் மருவிய கால இலக்கியம் என பெயரால் குறிக்கப்பட்டது.
சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர் பெற்றது.
கீழ்க்கணக்கு என்பது குறைந்த அடிகளைக் கொண்ட வெண்பா யாப்பில் அமைந்த பாக்களின் தொகுதி கீழ்க்கணக்கு என்பதாகும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கைநிலை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள 18 நூல்கள் சேர்ந்த தொகுப்புதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை குறிப்பிடப்படும் வெண்பா பாடல்:
“நாலடி நான்மணி நானாற்ப
– தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி
– மாமூல
மின்னிலய காஞ்சியோ டேலாதி
– யேன்பதூவுங்
கைநிலையும மாங்கீழ்க் கணக்கு.
இப்பாடலில் இதில் குறிப்பிடப்படும் வெண்பா ஆகும்.
“அடிநிமிர் உஇல்லாச் செய்யுள் தொகுதி
அறம்பொரு ள்இன்ப ம்அடுக்கி
– அவ்வகை
திறம்பட வருவது கீழ்க்கணக்கு ஆகும்.
என்பது பன்னிரு பாட்டில் சூத்திரத்தால் நாம் அறிந்திடும் கீழ்க்கணக்கில் இலக்கணம்.
அதாவது மிக்க அடிகளை கொள்ளாது சில அடிகளால் ஆகிய செய்யுள்களின் தொகுதிகள் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் ஒன்றோ பலவற்றையோ உணர்த்தி வருவன கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.
மேலும் இவைகளை நீதி நூல்கள், அறநூல்கள், இருண்ட கால இலக்கியங்கள் என்றும் அழைக்கப்படும்.
கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்த அனைத்து பாடல்களும் வெண்பா யாப்பில் அமைந்தவை இவற்றுள் (பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)
அறம்/ நீதி சார்ந்த நூல்கள்:
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
திருக்குறள்( முப்பால்)
திரிகடுகம்
ஆசாரக்கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
அகம் சார்ந்த நூல்கள்:
கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
கைந்நிலை
புறம் சார்ந்த நூல்:
களவழி நாற்பது
மேலும் பதினெண் கீழ்க்கணக்கு “நீதி நூல்களில்”
பெரிய நூல் – திருக்குறள்
சிறிய நூல் – இன்னா நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு“அகநூல்களில்”
பெரிய நூல் – திணைமொழி 150
சிறிய நூல் – கார் நாற்பது
மேலும் பதினெண்கழ்க்கணக்கு நூல்களில் “இரட்டை அறநூல்கள்”எனக் குறிப்பிடப்படும் நூல்கள்
“இன்னா நாற்பது”
“இனியவை நாற்பது”
மேலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் “மருத்துவ பெயரில்” அமைந்த நூல்கள்
“திரிகடுகம்”
“சிறுபஞ்சமூலம்”
“ஏலாதி”
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் “ஒழுக்கம்” பற்றி கூறும் நூல்
“ஆசாரக்கோவை”
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயரால் வழங்கப்படும் நூல்கள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி.