Categories
Uncategorized

பட்டினப்பாலை நூல் குறிப்பு மற்றும் அடிகள் வரையறை

 

1. காவிரியின் பெருமையைப் பற்றி சிறப்பித்து கூறும் பத்துப்பாட்டு நூல்

“பட்டினப்பாலை”

2. மருதநிலத்தின் வளமையை நிலையாக கூறும் நூல்

“பட்டினப்பாலை”

3. காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வ செழிப்பு களை மிகுதியாகக் கூறும் பத்துப்பாட்டு நூல்

“பட்டினப்பாலை”

4. கரிகால் பெருவளத்தான் இன் வீரச் செயல்களை பற்றி விரிவாய் கூறும் நூல்

“பட்டினப்பாலை”

5. கரிகால் பெருவளத்தான் உறையூர் ஐ வளப்படுத்திய வரலாற்று இடம்பெறும் நூல்

“பட்டினப்பாலை”

6.காவிரிப்பூம்பட்டினத்தை பற்றிய வரலாற்றுக் களஞ்சியம் எனும் சிறப்பித்துப் போற்றபபடும் பத்துப்பாட்டு நூல்

“பட்டினப்பாலை”

7. பட்டினப்பாலை என பெயர் வரக் காரணம்

“பட்டினத்தில் (காவிரிப்பூம்பட்டினத்தின்) சிறப்பைக் கூறும் பாலைத்திணை செய்யுள் என்பதால் பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது”

8. பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன்

“சோழன் கரிகால் பெருவளத்தான் (திருமாவளவன்)

9. பட்டினப்பாலையின் பாடலாசிரியர்

“கடியலூர் உருத்திரங்கண்ணனார்”

10. பட்டினப்பாலை அடிவரையரை

“301 அடிகள்”

11. பட்டினப்பாலை ஒரு

“அகப்பொருள் நூல் ஆகும்”

12. பட்டினப்பாலையின் பாவகை சிறப்பு

“இடையிடையே வஞ்சிப்பா அடிகள்விரவி வர ஆசிரியப்பாவால் பாடப்பட்டது”

13. பட்டினப்பாலை உணர்த்தும் திணை

“பாலைத் திணை”

14. பாலைத் திணையின் சிறப்பு

“பிரிதலும் பிரிதல் நிமித்தமும்”

15. பட்டினப்பாலையின் பாலைத் திணையின் பாடல் விளக்கம்

“தலைவியைப் பிரிந்து செல்ல நினைத்த தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றி தன் நெஞ்சத்திற்கு காரணத்தையும் கூறுவதையம் பிரிதலை தவிர்ப்பதாலும் அமைந்த திணை பாலைத் திணை”

16. பட்டினப்பாலையில் இடம்பெறும் அகப்பொருள் விளக்கம்

“செலவழுங்கல் என அர்த்தம்”

17. பட்டினப்பாலை நூலைக் குறித்து கலிங்கத்துப்பரணி எவ்வாறு விவரிக்கின்றது

“கரிகால் பெருவளத்தான் பட்டினபாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது”

 

18. பட்டினப்பாலைைை அரங்கேற்றப்பட்ட மண்டபம்

“பதினாறு கால் மண்டபம்”

19. பட்டினப்பாலையின் வேறு பெயர்கள்

“பாலை பாட்டு”

“வஞ்சி நெடும்பாட்டு”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *