Categories
Uncategorized

நான்மணிக்கடிகை நூல் விளக்கம் மற்றும் அடிகள் வரையறை

 

நான்மணிக்கடிகை”

மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்

தனக்குச் தகைசால் புதல்வர் -மனக்கினிய

காதல் புதல்வருக்கு கல்வியே -கல்விக்கும்

ஓதின் புகழ்சால் உணர்வு”

                                     – விளம்பிநாகனார்.

சொல் பொருள்:

   மடவாள் – பெண்

தகைசால் பண்பில் சிறந்த

மனக்கினிய மனதுக்கு இனிய

காதல் புதல்வர் அன்பு மக்கள்

ஓதின் எதுவென்று சொல்லும்போது

புகழ்சால் புகழைத் தரும்

உணர்வு – நல்லெண்ணம்

1. நான்மணிகள் எனும் தொடரால் குறிப்பிடப்படும் நூல் நான்மணிக்கடிகை ஆகும்.

2. அறிவார் யார் நல்லாள் பிறக்கும் குடி எனும் தொடர் இடம்பெறும் நூல் நான்மணிக்கடிகை.

3. நான்மணிக்கடிகை பிரித்து எழுதுக

“நான்கு + மணி + கடிகை”

4. நான்மணிக் கடிகை நூல் ஒரு

“பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூலாகும்”

5. நான்மணிக்கடிகை பெயர் வரக் காரணம்

“நான்கு வகை மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையை ஆகையால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது”

ஒவ்வொரு பாடலிலும்  ஒத்த நான்கு சிறந்த கருத்துக்கள் சேர்ந்து இணைந்து கூறப்படுவதால்“நான்மணிக்கடிகை எனப்பயர் பெற்றது”

இன்னா நாற்பது நூல் விளக்கம்

6. நான்மணிக்கடிகை பாடலாசிரியர்

“விளம்பிநாகனார்”

7. நான்மணிக்கடிகை அடிவரையரை

“நான்கு (4) அடிகள் கொண்டது”

8. நான்மணிக்கடிகை பாவகை

“வெண்பா பாக்கள்”

9. நான்மணிக்கடிகை பாடல்களின் எண்ணிக்கை

” கடவுள் வாழ்த்து(1) ,103 வெண்பாக்கள்  உடன் சேர்த்து மொத்தம் (104) பாடல்கள் கொண்டது”

10. நான்மணிக்கடிகையில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்

“திருமால்”

11. நான்மணிக் கடிகையில் இடம்பெறும் இரண்டு பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்

“ஜி யு போப்”

12. நான்மணிக்கடிகை இயற்றப்பட்ட ஆண்டு

“கிபி நான்காம் நூற்றாண்டு”

13. நான்மணிக்கடிகை இயற்றிய விளம்பிநாகனார் பிறந்த ஊர்

“விளம்பி”

14. நான்மணிக் கடிகையின் வேறு பெயர்

“வைணவ இலக்கியம்”

15. விளம்பிநாகனார் சமயத்தைச் சார்ந்தவர்

“கடவுள் வாழ்த்து பாடல் இரண்டும் திருமாலைப் பற்றி உள்ளதால் இவர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் ஆவார்”

16. விளம்பிநாகனார் ஐ பற்றி நூல் குறிப்பு

“இவர் பெயர் நாகனார் இவர் பிறந்த ஊர் விளம்பி ஆகையால் இவரை விளம்பிநாகனார் என்று அழைக்கப்பட்டார்கள்.

விளம்பி நாகனார் சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்றும் கூறுவர்.

இவர் கிபி நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்.

17. நான்மணிக்கடிகையில் இடம்பெறும் சிறப்பு தொடர்கள்

“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமில்லா போல்தத்து வள்ளன்மை குற்றம்”

“நிலத்துக்கு அணி நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணி தாமரை

பெண்ணுக்கு அணி நாணம்”

 

18. கடிகை என்பதன் பொருள்

“அணிகலன்”

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *