Categories
Uncategorized

நானாற்பது முழுமையான விளக்கம்

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:

               “நானாற்பது”என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

                 “இன்னா நாற்பது”

              “இனியவை நாற்பது”

                 “களவழி நாற்பது”

                    “கார் நாற்பது”

 

2. நானாற்பது இலக்கணம்

“வைத்தியநாததேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பற்றிக் கூறும்  நானாற்பது பின்வருமாறு காணலாம்.

காலம் இடம்பொருள்  கருதி நாற்பான்

சால உரைத்தல் நான்நார் பதுவே

இதன் இலக்கண விளக்கம்

காலம் இடம் பொருள் இவற்றில் ஒன்றினைத்வெண்பா நாற்பதால் விளக்கி உணர்த்துவது “நானாற்பது”

 

கார் நாற்பது பாடலின் பொருள்:

(காலம் குறித்து விளக்க உணர்த்துவது)

கார்காலத்தில் வருவேன் என்று விடைமேல் சென்ற தலைவன் வராமையினால்தலைவி பிரிவாற்றாமல் வருந்துவதை கார்காலப் பின்னணியில் எடுத்து உணர்த்தும் 40 வெண்பாக்களை உடையது “கார் நாற்பது”(கண்ணன்  கூத்தனார்).

 

களவழி நாற்பது பாடலின் பொருள்:

(இடம் குறித்து விளக்குவது)

சோழன் கோச்செங்கணனுக்கும் சேரன் கனைக்கால் இளம்பொறைக்கும் கழுமலம் என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியுற்ற சேரனை விடுவிக்க சேரனுடைய நண்பர் பொய்கையார் சோழனுடைய வெற்றியை போர்க்கள பின்னணியில் புகழ்ந்து பாடும் 40 வெண்பாக்களை உடையது“களவழி நாற்பது”(பொய்கையார்).

 

இன்னா நாற்பது பாடலின் பொருள்:

(பொருள் குறித்து விளக்குவது)

இன்னது இன்னது துன்பம் தரும் என்று எடுத்துரைக்கும் 40 வெண்பாக்களை உடையது“இன்னா நாற்பது”(கபிலர்).

 

இனியவை நாற்பது பாடலின் பொருள்:

(பொருள் குறித்து விளக்குவது)

இன்னது இன்னது இன்பம் தரும் என்று எடுத்துரைக்கும் 40 வெண்பாக்களை உடையது“இனியவை நாற்பது”(பூதஞ்சேந்தனார்).

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *