சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கிமு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வுகள் தெரிவிக்கின்ற ஒரு சரித்திர நாவலை படைத்து உலகறிய உலகப் பொதுமறை என்றுு போற்றக் கூடிய வகையில் இந்் நூலின் பெருமையை இவ்வுலகத்திற்கு கொண்டுவந்த மிகப்பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.
திருக்குறள்:
திருக்குறள் புகழ்பெற்ற தமிழ் இலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் என்று என்ற வேறு பெயர்களும் திருக்குறளுக்கு உள்ளன.
திருக்குறள் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது. மேலும் திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும்.
திருக்குறள்் முதன்முதலாக 1812 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. அதன் பிறகு இதன் அருமை பெருமை காரணமாக உலகறிய வைக்க ஆங்கிலத்தில் 1840 ஆண்டு அச்சிடப்பட்டது. திருக்குறள் நூலானதுு திருவள்ளுவரின் சுுயசிந்தனை அடிப்படையில் இயற்றப்பட்டது.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் குறிப்பு:
கி-மு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட நூல் தான் திருக்குறள். மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆண்டுகளை குறிப்பிட திருவள்ளுவர் ஆணடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
திருக்குறள் என பெயர் வரக் காரணம்:
திருக்குறளில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் குறள் வெண்பா எனும் வெண்பா வகையைச் சார்ந்தது. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆன முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
திருக்குறள் அனைத்தும் குறள் வெண்பாக்களாலஆனதால் குறள் என்றும் அதன் உயர்வு கருதி திரு என்ற அடைமொழியுடன் திருக்குறள் என பெயர் பெறுகிறது. குறுகிய செய்யுள் என்பதே “திருக்குறள்” ஆகும்.
மேலும் உலக மக்கள் அனைவருக்கும் எந்தக் காலத்திலும்்்் பொருந்தும் வகையில் அமைந்துள்ளதால் இதனை உலகப்பொதுமறை என்றுு அழைக்கப்படுகிறது.
திருக்குறள் அனைத்தும் ஈரடிகளில் உலகத் தத்துவத்தை சொன்னதால் ஈரடி நூல் என்றும், அறம் பொருள் இன்பம் அல்லதுு காமம் எனும் முப்பிரிவுகளைக் கொண்டதால் முப்பால் என்றும்் அழைக்கப்படுகிறது.
திருக்குறளின் வேறு பெயர்கள்:
உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், பொதுமறை, முப்பால், தமிழ்மறை, ஈரடிநூல்,வானம்மறை,உலகப்பொதுமறை.
திருக்குறள் நூற் பிரிவுகள்:
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களை கொண்டதால் முப்பால் எனப் பெயர் பெற்றது. முப்பால் ஒவ்வொன்றும் இயல் என்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு இயல்களிலும் குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியுள்ளது.
ஆனால் குறலின் அதிகாரங்கள் ஏன் 10 குறல்களை கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அறத்துப்பால்:
பாயிரவியல் நான்கு அதிகாரங்களும் பாயிரவியல் ஐ தொடர்ந்து முதல் 20 அதிகாரங்களுடன் இல்லறவியல் அடுத்து 13 அதிகாரங்கள்் கொண்ட துறவறவியல் இறுதியில் ஊழ் என்னும் அதிகாரம் கொண்ட ஊழியல். திருக்குறளில் ஒரே ஒருு அதிகாரமுடைய இயல் ஊழியல் மட்டுமே. முதற்பால் ஆகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.
பொருட்பால்:
அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல்(25 அதிகாரங்களும்), அமைச்சு இயல் (32 அதிகாரங்களும்),ஒழிபுஇயல்(13 அதிகாரங்களும்) உள்ளன. மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால்:
கடைசிபால் ஆகிய இன்பத்துப்பாலில் (களவியல்)7 அதிகாரங்களும், (கற்பியல்) 18 அதிகாரங்களும் உள்ளன. மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.
அறத்துப்பால் இன்பத்துப்பால் பொருட்பால் ஆகிய முப்பாலும் சேர்த்து மொத்தம் 133 அதிகாரங்களும், 1330 குறல்களும் உள்ளன. திருக்குறளை திருவள்ளுவர் 14000 சொற்களில் பாடியுள்ளார்.
திருக்குறளின் நூல் சிறப்பு:
கவிஞர் வீரமாமுனிவர் 1730 முப்பதாம் ஆண்டு ஐரோப்பிய மக்களுக்கு லத்தின்மொழியில் திருக்குறளை அறிமுகப்படுத்தினார். திருக்குறளின் கருத்துக்களை முதன்முதலாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் கிண்டர்ஷிலே.
மொழிபெயர்ப்பின் சிறப்பு:
உலகிலேயே அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் இடம் பிடித்துள்ளது. இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு:
குஜராத்தி, ஹிந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமஸ்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
ஆசிய மொழிகளில் திருக்குறளின் சிறப்பு:
அரபி, பர்மிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளில் மொழிபயர்க்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மொழிகளில் திருக்குறளின் சிறப்பு:
செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு மொழி, செருமன், ஹங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, லத்தின், நார்வே மொழி, போலிய மொழி, ரஷ்ய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் தனித்தன்மை வாய்ந்த சிறப்புகள்:
* திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
* திருக்குறளை முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
* திருக்குறளின் முதல் பெயர் முப்பால்.
* திருக்குறளின் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 380 .
* திருக்குறளின் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் 700 .
* திருக்குறளின் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 270 .
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் 1330.
* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிவடைகிறது.
* ஒவ்வொரு குறல்களும் 2 அடிகள் மற்றும் ஏழு சீர்கள் கொண்டது.
* திருக்குறளில் உள்ள சொற்கள் மொத்தம் 14000.
* திருக்குறளில் உள்ள எழுத்துக்கள் மொத்தம் 42194.
* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 எழுத்துக்களில் 37 எழுத்துக்கள் மட்டுமே இடம் பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை.
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்.
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி.
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஓள.
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் “குறிப்பறிதல்.
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை மரம், மூங்கில்.
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஓர் எழுத்து – னி
* திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில் அதே குறளில் வருவது பற்று (6 முறை வருகிறது).
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி யு போப்.
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் பரிமேலழகர்.
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது .
* திருக்குறளில் ஏழு இடங்களில் இடம்பெற்ற சொல் கோடி.
* திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
* திருக்குறளை ஆங்கிலத்தில் இதுவரை 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி என்ற மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதுு குறிப்பிடத்தக்கது.