பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம் பற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதனார் என்ற இயற்பெயர் கொண்ட நல்லாதனார் என்பவர்(திரிகடுகம் ) என்ற நூலுக்கு உரிமையானவர்.
நல்லாதனார் என்ற பெயரில் இடம்பெறும்” நல்”எனும் சொல் அடைமொழி என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லாதனார் இன் காப்புச் செய்யுளில் இடம்பெறும் (“பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகை அளந்தது) (குருநாதமரம் சாய்ந்தது),( மாயச் சகடம் உதைத்தது) ஆகியவைை பற்றி கூறியிரப்பதால் இவர் “வைணவ சமயத்தை”சேர்ந்தவராவார்.
இவர் இயற்றிய திரிகடுகத்தில் கூறப்படும் “காரம்”கார்ப்பு (உறைப்பு) என்று பொருள் உணர்த்தும் (“கடுக்கம்”) பொருளாகிய (சுக்கு, மிளகு, திப்பிலி) இவற்றுள் ஒன்றையோ அல்லதுுுு இம்மூன்றையும் கடுக்கும் என்றுு உணர்த்தும். மேலும் இதுுுு சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும் போது “திரிகடுகம்”எனப் பெயர் பெற்றது.
இதில் குறிப்பிடப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இப்பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு பாட்டிலும் இடம்பெற்றுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையான நோய்களைப் போக்கி வாழ்க்கை வளம்பற அமையும் என்ற காரணத்தால் இந்நூலினை திரிகடுகம் என்று அழைக்கப்படுகிறது.
101 வெண்பாக்களை கொண்ட இந்நூல் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
திரிகடுகத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகள்:
ஒருவன் உயர்வும், ஊக்கமும் பெற வேண்டுமானால் உலகத்தோடு எப்படி ஒட்டி ஒழுக வேண்டும் என்பது பற்றி கூறும் சிறப்பு பாடல்
“முந்தை எழுத்தின்
வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு
– வந்த
ஒழுக்கம் பெருநெறி
சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப நெறி தூரவாரு”
திரிகடுகத்தில் இடம்பெறும் முக்கிய குறிப்புகள்:
* திரிகடுகத்தை இயற்றியவர்
“நல்லாதனார்”
* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்களின் எண்ணிக்கை
“100”
*நல்லாதனார் பிறந்த ஊர்
“திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருத்து என்ற ஊர்”
*பாயிரத்தில் நல்லாதனார் ஐ எவ்வாறு குறிப்பிடுகிறார்
“செரு அடுதோள் நல்லாதன்”
*திரிகடுகம் ஒரு
“மருத்துவப் பயனுள்ள நூல்”
*திரிகடுகத்தில் கூறும் மூன்று மருந்துப் பொருள்கள்
“சுக்கு, மிளகு, திப்பிலி”
*திரி என்பதன் பொருள்
“மூன்று”
*கடுகம் என்பதன் பொருள்
“காரம் உள்ள பொருள்”
*திரிபலை என்பது எவ்வகை கலவை
“தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய்”
*திரிகடுகத்தில் இடம்பெறும் பாடலில் எத்தனை பாடல் நன்மைதரும் பாடல் பற்றி கூறுகிறது
“66 பாடல்கள் நன்மை தருபவை”
*திரிகடுகத்தில் இடம்பெறும் பாடலில் எத்தனை பாடல் தீமை தரும் பாடல் பற்றி கூறுகிறது
“34 பாடல்கள் தீமை தருபவை”
***##சுக்குவின் மருத்துவ குணங்கள்#
1. சுக்குடன் சிறிதுு பால் சேர்த்துு மையாக அரைத்து நன்குு சூடாக்கி சூடுு ஆறியவுடன் வலி உள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர வலி குணமாகும்.
2. சுக்கைைத் தூள் செய்து எலுமிச்சைை
சாறுடன் சேர்த்து குடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்குடன் சிறிதுு வெற்றிலையை சேர்த்துு சாப்பிட்டால் வாயுத்தொல்லைை நீங்கும்.
4. சுக்கு கருப்பட்டி மிளகு சேர்த்து “சுக்கு நீர்” காய்ச்சிி குடித்து வர உடல் அசதி நீங்கும்.
5. சுக்குு வேப்பம்பட்டை சேர்த்து கசாயம் குடித்துு வர ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
***##மிளகின் மருத்துவ பயன்கள்***##
2. தினசரி மிளகு பொடி 1/2 கிராம் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலந்துு பருகி வர பசியை உண்டாக்குும் மற்றும் உமிழ்நீரை பெருக்கிி உணவினை எளிதாக செரிமானம் அடைய செய்யும்.
**###திப்பிலி மருத்துவ பயன்கள்**##
1. திப்பிலியின் காய்கள் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், உயர் ரக மதுபான பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2. காச நோயை தடுக்கும் வல்லமை கொண்டது திப்பிலி.
3. சித்த மருத்துவத்தில் திப்பிலியுடன் மிளகு, சுக்கு சேர்த்து பயன்படுத்தப்படுவதால் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது.
5. திப்பிலியைை பொடியாக்கி 1:2 விகிதத்தில் வெல்லம் சேர்த்து உட்கொள்ள விந்துு பெருகும். நெய்யுடன் சேர்த்துு உட்கொள்ள ஆண்மைை பெருகும்.