திணைமாலை 150 (ஐந்திணை தொகுப்பில் ஒன்று) நூல் விளக்கம்:
பண்டைய தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 153 பாடல்களைக் கொண்ட அகப்பொருள் சார்ந்த சமண சமயத்தைச் சார்ந்த கணிமேதாவியார் என்ற புலவரால் இயற்றப்பட்ட “திணைமாலை 150”என்ற நூலினை சற்றுுுு விரிவாக இங்கே காண்போம்.
கணிமேதாவியார் திணைமாலை 150 மட்டுமின்றி மற்றொரு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “ஏலாதி என்ற நூலையும் இயற்றியுள்ளார்”.
மேலும் திணைமாலை 150 ஐந்திணையின் கீழ் இயற்றப்பட்டுள்ளது. மேலும் இங்கே ஒவ்வொரு திணையும் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளன என்பதை சற்று விரிவாக காணலாம்.
திணைமாலை 150 இடம்பெறும் திணை வைப்பு முறை முதலில் குறிஞ்சித் திணையில் தோன்றி நெய்தல், பாலை, முல்லை, மருதம் திணையில் முடிவடைகிறது.
இதனடிப்படையில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை பின்வருமாறு காணலாம்.
குறிஞ்சித்திணை ( 1 முதல் 31 பாடல்கள் வரை)
நெய்தல் திணை ( 32 முதல் 62 பாடல்கள் வரை)
பாலைத் திணை ( 63 முதல் 92 பாடல்கள் வரை)
முல்லைத்திணை ( 93 முதல் 123 பாடல்கள் வரை)
மருதத்திணை ( 124 முதல் 153 பாடல்கள் வரை)
திணைமாலை 150 இல் இடம்பெறும் முக்கிய பாடல் :
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகருக்கு மாலையாழ் ஓதி வருடாயோ? காலையாழ் செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு நையும் இடமறிந்து நாடு .
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறும் அகநூல்களில் மிகவும் பெரிய நூல் “திணைமாலை நூற்றைம்பது”
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் யாவை:
ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்.
ஐந்திணை எழுபது – மூவாதியார்.
திணைமொழி ஐம்பது – கண்ணன் சேந்தனார்.
திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்.
கார் நாற்பது – கண்ணன் கூத்தனார்.
கைந்நிலை – புல்லங்காடனார்.