“மா”என்ற அடைமொழி கொண்டு பாயிர செய்யுளில் சிறப்பித்து அழைக்கப்படும் சமண புலவர்களில் ஒருவரான 97 செய்யுள்கள் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்களில் ஒன்றான நான்கு அடிகளால் அமைந்த 100 பாடல்களைக் கொண்ட “மா”என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் “காரியாசனால் இயற்றப்பட்ட சிறுபஞ்சமூலம் “என்ற நீதிிநூல் உண்மைப் பற்றி விரிவாக காண்போம்.
இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பான ஐந்து விடயங்களை எடுத்துரைக்கிறது. ஆனால் அனைத்து பாடல்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை என்ற காரணத்தினால் இந்நூலினை சிறுபஞ்சமூலம் என்று அழைக்கப்படுகிறது. சிறுபஞ்சமூலம் காரியாசன் என்ற சமண புலவரால் இயற்றப்பட்டது.
சிறுபஞ்சமூலம் பெயர் காரணம்:
பஞ்சம் என்றால் 5 என்றும், மூலம் என்றால் வேர் என்பது பொருளாகும். பண்டைய காலத்தில் தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களை தீர்ப்பதற்கு கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களை சேர்த்து மருந்தாக்குவது போல ஐந்து விடயங்கள் மூலம் நீதியை போதித்து இந்நூல் ஒழுக்கக்கேட்கு மருந்தாகிறது.
சிறுபஞ்சமூலத்தினை இயற்றிய காரியாசன் ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் இவரும் கணிமேதாவியர் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். ஆகையால் இருவருமே சமண சமயத்தைச் சார்ந்தவர் ஆவார். மேலும் காரியாசன் மதுரைத் தமிழாசிரியர் மகாயணர் மாணவர் ஆவார். காரியாசன் என் இயற்பெயர் காரி. ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர்.
சிறுபஞ்சமூலத்தில் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகளில் ஒன்று “பூவாது மரம் காய்க்கும் நன்று அறியார்”இப்பாடல் மக்களின் அறியாமையைை பற்றி விளக்குகிறது.
சிறுபஞ்சமூலத்தில் சிறப்பு:
மனித வாழ்க்கையை செளுமையாக்குபவை அறப் பண்புகளே காலந்தோறும் அறக்கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் தோன்றி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான் சிறுபஞ்சமூலம் எனும் நூல் வயதுக்கும், அறிவிக்கும் சில நேரங்களில் தொடர்பில்லை ஆகையால் சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்று தெளிவாக உணர்த்துகிறதுு.
சிறுபஞ்சமூலத்தின் முக்கியமான பாடல்:
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.
பாடலின் பொருள்:
பூக்காமலே சில மரங்கள் காய்ப்பது உண்டு. இதைப்போலவே நன்மை தீமைகளை நன்கு உணர்ந்தவர் வயதில் இளையவராக இருந்தாலும் அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தகுந்த வராவார். பாத்தி அமைத்து விதை விதைக்காமலே தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதை யாவரும் பிறர் உணர்த்தாமல் தாமே வளர்ந்து கொள்வார்.
பாடலில் இடம்பெறும் அணி :
எடுத்துக்காட்டு உவமையணி