Categories
Uncategorized

கைந்நிலை – புல்லங்காடனார் – இந்நூலினை “ஐந்திணை அறுபது”என்றும் அழைக்கப்படுவர்..

 

கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல் தான் “கைந்நிலை”இந்நூலினை புல்லங்காடனார் என்னும்  புலவரால் இயற்றப்பட்டது. கைநிலை ஒரு அகப்பொருள் நூல் ஆகும். மேலும் இது 60 பாடல்களைக் கொண்டுள்ளது. ஐந்துு தமிழர் நிலத்திினை பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்றும் பெயர் உண்டு .

சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக முறை இந்நூலுக்கு உள்ளது. கை என்றாால் ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஐந்திணை ஒழுக்க நிலை பற்றி கூறும் நூல் ஆதலால்  கைந்நிலை என பெயர் பெற்றது.

 

இந்நூலில் இடம் பறும் வடசொற்கள் பின்வருமாறு:

ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்திரம்.

 

 கைந்நிலை திணை வைப்பு முறை முதலில் குறிஞ்சித் திணையில்  தோன்றி பாலை, முல்லை, மருதம் நெய்தல் திணையில் முடிவடைகிறது.

 

 கைந்நிலை பாடல்களின் எண்ணிக்கை:

குறிஞ்சித்திணை – 12 பாடல்கள்.

பாலைத் திணை – 7 பாடல்கள்.

முல்லைத்திணை – 3 பாடல்கள்.

மருதத்திணை – 11 பாடல்கள்.

நெய்தல் திணை – 12 பாடல்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மொத்தம் 45 பாடல்கள் முழுமை நிலையில் உள்ளன. இதர பாடல்கள் செல் அரிக்கப்பட்டு  உள்ளன.

 

இன்னிலை, கைந்நிலை வேறுபாடு:

இன்னிலை:

இந்நிலை அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகை பொருளால்  45 வெண்பா பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். இந்நூலினை முதல் முதலில் பதிப்பித்தவர திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளை எனும் ஆசிரியர்.

கைந்நிலை:

இந்நூலை இயற்றியவர் மாரோகத்து முள்ளிநாட்டு நல்லூர் கவிதியார் மகனார் “புல்லங்காடனார்”இதனை திரு. அனந்தராம ஐயர். அவர்களால் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

 

இன்னிலை, கைந்நிலை வேறுபாடு:

இந்நிலை ஒரு புறப்பொருள் நூலாகும்.

கைந்நிலை ஒரு அகப்பொருள்நூலாகும்.

இந்நிலை பாடல்கள் 45 பாடல்கள்.

கைந்நிலை பாடல்கள் 60 பாடல்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *