சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கிய நூல் தொகுப்பான பதினெண் கழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்களுள் ஒன்றான “மதுரையைச் சார்ந்த கண்ணன் கூத்தனார்”எனும் புலவரால் பண்டையக்கால தமிழரின் “அக வாழ்க்கையின் அம்சங்களையும்”மற்றும் தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காக ஏக்கத்தோடு “கார்காலப் பின்னணியில் எடுத்துரைக்கும் நூல்”தான் “கார் நாற்பது”பற்றி விரிவாக காண்போம்.
இந்நூல் கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும் அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும் தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
கார்நாற்பது எடுத்துக் கூறும் திருவிழா:
கார்கால திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா அன்று மக்கள் வீடுுுு வீடாக விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.
அதே போல வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாக தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக” மழை வந்துள்ளது”எனும் பொருளில் வரும் பாடல் பின்வருமாறு.
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட தலைநாள் விளக்கி றகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மொழி.
கார்நாற்பது முக்கிய குறிப்புகள்:
* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்களில் மிகவும் சிறியது “கார் நாற்பது”.
* கார்நாற்பது இல் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 40 பாடல்களைக் கொண்டது.
* திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்ற “கார்த்திகை தீபத் திருவிழா இந்நூலில் தான் விளக்கப்படுகிறது”.
* கார் நாற்பது பாடல் “நாடக வடிவில் அமைந்துள்ளது”.
* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே ஒரு திணையை(முல்லைத்திணை) பற்றி பாடும் நூல் “கார் நாற்பது”
* கார்நாற்பது இடம்பெறும் ஒவ்வொரு பாடலிலும் “கார்கால வருணனை பற்றி கூறுகிறது”.
* கார் நாற்பது ஆசிரியர் “மதுரையைச் சேர்ந்த கண்ணன் கூத்தனார்”.