பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே புறப்பொருள் குறித்து பாடப்படும் ஒரே பாடல் “களவழி நாற்பது”இந்நூலினை சோழ மன்னனான கோச்செங்காகானுக்கும் சேரமான் கணைக்காலிரும் போறைக்கும் இடையே கழுமலத்தில் இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டதுு தான் “களவழி நாற்பது”.
களவழி நாற்பது நூலினை இயற்றியவர் பொய்கையார். இவர் சேர மன்னனுடைய நண்பர் ஆவார். அங்கு நடைபெற்ற போரில் சேரன் தோற்று கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன.
இதில் உள்ள 40 பாடல்கள் அக்காலத்து போர்க்காலக் காட்சிகளையும் சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றி கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் இந்நூலில் உள்ள பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகளை குறிப்பிடுவது அக்காலத்தில் யானைப் படைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
களவழி நாற்பது பெயர் வரக் காரணம்:
நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தை பாடுவதே “ஏரோர் களவழி” எனவும் பகைவரைை அழிக்கும் போர்க்களத்தை பற்றிப் பாடுவது “தேரோர் களவழி” இவ்விரண்டில் தேரோர் களவழி கைப்பற்றி பாடுவதுதன்”களவழி நாற்பது”.
இந்தக் களவழி நாற்பது நூல் பெரும்பாலும் மரபு செய்திகளையே தருகிறது. குழுமத்தில் நடைபெற்ற போர்களின் வர்ணனைகளையும் செய்கிறது. சோழமன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இளம் போறையை வென்று சிறையில் அடைத்தான். என்று புலவர் பொய்கையார் செங்கணான் போரைை சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாக சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.
களவழி நாற்பதில் இடம் பெரும் போர்கள் எங்கு நடந்தவை என்பது தெளிவான விளக்கம்:
* திருப்பூர் மாாவட்டத்தில் நடந்ததாக புறநானூற்றின் பாடல் அடி வரிகள் குறிப்பிடுகிறது.
* களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் எனும் ஊரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
* புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
* களவழி நாற்பதின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்.
களவழி நாற்பது முக்கிய குறிப்புகள்:
* களவழி நாற்பது நூலின் ஆசிரியர் பொய்கையார்.
* களவழி நாற்பதின் பாடல்களின் எண்ணிக்கை இந்நூல் போர்க்கால அடிப்படையில் 40 பாடல்களைக் கொண்டது.
* களவழி நாற்பது ஒரு புறப்பொருள் நூலாகும்.
* களவழி நாற்பது எத்தனை வகைப்படும் இரண்டு வகைப்படும் அவை யாவன
* போர்க்களக் களவழி * ஏர்கல களவழி
* களவழி நாற்பதில் இடம்பெறும் பாடல்களில் கடைசியில் அட்ட களத்து என முடியும்.
* களவழி நாற்பது பரணி இலக்கியம் தோன்ற காரணமாக இருந்தது.
* களவழி நாற்பதின் வேறு பெயர் பரணி நூலின் தோற்றுவாய் எனவும் அழைக்கப்படுகிறது.