பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் குறித்து அமையும் நூலான சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை எழுபது என்ற நூலினை இயற்றியவர் மூவாதியார். இந்நூலில் குறிப்பிடப்படும் ஐந்து திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து வகையான பண்டைய கால தமிழ் நிலப் பரப்புகள் ஆகும்.
மூவாதியார் பற்றி சில வரிகள்:
மூவாதியார் ஐ சமணர் என்று கூறுவர் சிலர் ஆனால் இதற்குச் சான்றுகள் எதுவும் கிடையாது. இவருடைய பெயருக்கு உரிய காரணம் புலப்படவில்லை. ஒருவேளை அயன், மால், சிவன் எனும் மூன்று கடவுளுக்கும் மூலமான பரம்பொருள் இன்றுு நூலுக்கு விளக்கம் கூறலாம்.
இந்த ஐந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் 70 பாடல்கள் கொண்டுள்ளதால் இதனை ஐந்திணை எழுபது என்று அழைக்கப்படுகிறது.
இந்நூலின் திணை வைப்பு முறை பற்றி சற்று விரிவாக காண்போம் இந்நூலில் முதலில் இடம்பெறும் திணை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல். இத்திணைகளில் பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பு கெட்டு தோன்றுவதால் ஆதலால் நான்கு திணைகளுக்கும் பொதுவாய் அமைந்த திணை ஆதலால்“நடுவண் திணை” என சிறப்பிக்க பெறுவதாலும் பாலைத்திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது என்பார்கள்.
இந்நூல் அகப்பொருள் சார்ந்த திணை ஆதலால் அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களை போலவே இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகள் இனிதும் பண்பாட்டினதும் பின்னணியிலும் அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்கு பொருத்தமான நிலத்திணைகளில் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது.
எடுத்துக்காட்டாக பின்வரும் பாடல்:
இனத்த வருங்கலை பொங்க புணந்த கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி யானும் அவரும் வருந்த சிருமாலை தானும் புயலும் வரும் .
மேலும் ஆய்வுகளின் அடிப்படையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்திணை ஐம்பது இந்நூலின் அடியை ஒற்றி எழுதப்பட்டு இருக்கலாம் என ஆய்வுகள் கருதுகின்றன. எனவேதான் இவ்விரண்டு நூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இந்நூல்களின் அடிகளும் கருத்துக்களும் ஒன்று போலவே அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38ஆம் பாட்டில் ” கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படைத்த நெறி” உள்ள வரிகள் அப்படியே ஐந்திணை எழுபதில் உள்ள 36 ஆம் பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்நூலைப் பற்றி தொடக்கத்தில் விநாயகரை பற்றி கடவுள் வணக்கம் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இத்தகைய கடவுள் வாழ்த்து நூலுக்குுு புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்குுுு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதயாரால் இயற்றப்பட்டு இருக்காது என ஆய்வுகள் கருதப்படுகிறது.
இதில் அமையும் கடவுள் வாழ்த்துப் பாடல் விநாயகர் வணக்கம் பற்றி அமைந்துள்ளது.