Categories
Uncategorized

ஆசாரக்கோவை – தமிழரின் வாழ்க்கை முறையை தெளிவாக உணர்த்தும் நூல்

 

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக் கூறும் வன்கயத்தூரை சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவரால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பிடப்படும் நீதி நூல்களில் ஒன்றான ” ஆசாரக்கோவை”பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

இன்னூல் பல்வேறு வெண்பா வகைகளால் ஆன100 பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்துரைக்கிறது.

 

ஆசாரக்கோவையில் இடம்பெறும் ஒழுக்கத்தைப் பற்றிய பட்டியல் பின்வருமாறு காணலாம்:

1. ஆசார வித்து.

2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்.

3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்.

4. முந்தையோர் கண்ட நெறி.

5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை.

6. எச்சிலுடன் காணக் கூடாதவை.

7. எச்சில்கள்.

8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை.

9. காலையில் கடவுளை வணங்குக.

10. நீராட வேண்டிய சமயங்கள்.

11. பழமையோர் கண்ட முறைமை.

12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை.

13. செய்யத் தகாதவை.

14. நீராடும் முறை.

15. உடலைப் போல் போற்றத்தக்கவை.

16. யாவரும் கூறிய நெறி.

17. நல்லறிவாளர் செயல்.

18. உணவு உண்ணும் முறைமை.

19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை.

20. உண்ணும் விதம்.

21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது.

22. பிற திசையும் நல்ல.

23. உண்ணக்கூடாத முறைகள்.

24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை.

25. கசக்கும் சுவை முதலிய கசக்கும் சுவை உடைய உணவை உண்ணும் முறை.

26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை.

27. உண்டப் பின் செய்ய வேண்டியவை.

28. நீர் குடிக்கும் முறை.

29. மாலையில் செய்ய வேண்டியவை.

30. உறங்கும் முறை.

31. இடையில் செல்லாமை முதலியன.

32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாது இடங்கள்.

33. மலம், சிறுநீர் கழிக்கும் முறை.

34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை.

35. வாய் அலம்ப இடங்கள்.

36. ஒழுக்கம் அற்றவை.

37. நரகத்துக்குச் செலுத்துவன.

38. எண்ணக் கூடாதவை.

39. தெய்வத்துக்கு வழி ஊட்டிய பின் உண்க.

40. சான்றோர் இயல்பு.

41. சில செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை.

42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்.

43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்.

44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை.

45. பந்தலில் வைக்கத் தகாதவை.

46. வீட்டைப் பேணும் முறைமை.

47. நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்.

48. அறம் செய்தற்கும் விருந்து அளித்திருக்கும் உரிய நாட்கள்.

49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்.

50. கேள்வி உடையவர் செயல்.

51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை.

52. தளராத உள்ளத்தவர் செயல்.

53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை.

54. விருந்தினர்க்கு செய்யும் சிறப்பு.

55. அறிஞர் விரும்பாத இடங்கள்.

56.  தவிர்வின சில.

57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை.

58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை.

59. சில தீய ஒழுக்கங்கள்.

60. சான்றோர் உடன் செல்லும் போது செய்யத் தக்கவை.

61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு.

62. சான்றோர்க்கு செய்யும் ஒழுக்கம்.

63. கற்றவர் கண்ட நெறி.

64. வாழக்கடவர் எனப்படுபவர்.

65. தனித்திருக்கக் கூடாதவர்.

66. மன்னருடன் பழகும் முறை.

67. குற்றம் ஆவன.

68. நல்ல நெறி.

69. மன்னன் செய்கையில் 

வெறுப்ப டைய மை முதலியன.

70. மன்னன் முன் செய்யத் தகாதவை.

71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை.

72. வணங்கக் கூடாத இடங்கள்.

73. மன்னர் முன் செய்யத் தகாதவை.

74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை.

75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை.

76. சொல்லும் முறைமை.

77. நல்ல குலப்பெண்ணின் இயல்பு.

78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை.

79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்.

80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை.

81. ஆன்றோர் செய்யாதவை.

82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்.

83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை.

84. பழகியவை என இகல தகாதவை.

85. செல்வம் கெடும் வழி.

86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது.

87. கட்டிலில் படுத்துஇருப்பவருக்கு செய்யத் தகாதவை.

88. பெரியோர் போர் வாழ்பவர் என்னும் செய்கைகள்.

89. கிடைக்காதவற்றை விரும்பாமை.

90. தலையில் சூடிய மோத்தல்.

91. பழியாவன.

92. அந்தணரின் சொல்லைக் கேட்க.

93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை.

94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை.

95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை.

96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்.

97. சான்றோர் முன் சொல்லும் முறை.

98. போகக்கூடாத இடங்கள்.

99. அறிவினர் செய்யாதவை.

100. ஒழுக்கத்தினின்று விலகியவர். 

 

ஆசாரக்கோவை பற்றி முக்கிய குறிப்புகள்:

* ஆசாரக் கோவையின் ஆசிரியர் கயத்தூர் பெருவாயின் முள்ளியார்.

* ஆசாரக்கோவை பாடல் ஐந்தாம் நூற்றாண்டு இல் இயற்றப்பட்டது.

* ஆசாரம் என்றால் ஒழுக்கம் என்றும் கோவை என்றால் தொகுப்பு என்றும் பொருள்படும்.

* ஆசாரக்கோவை வெண்பா வகைகள் ஈற்றடி முச்சீர் ஆகவும் ஏனைய அடிகள் நார் சீராகவும் அமைந்த வெண்பாக்களால் ஆனது.

* மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை தமிழினத்திற்கு வழிகாட்டுகிறது. நாம் எத்தனையோோ நூல்களைப் படித்து இருக்கிறோம் இனிிவரும் காலங்களில் படிக்கப் போகிறோம். இருப்பினும் தமிழ் கூறும் நல்லுலகில் ஆசாரக்கோவைை எனும் உரிய நூலை தமிழ்நெஞ்சம் படித்து ஆச்சாரமாக வாாழவேண்டும் என்பதே இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *