1. தமிழ்நாட்டு வரலாற்று நூல் என அழைக்கப்படும் நூல்
“புறநானூறு”
2. தமிழுக்கு தொண்டாற்றிய ஜி யு போப் அவர்களை மிகவும் கவர்ந்த நூல்
“புறநானூறு”
3. தமிழர்களின் வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாக கொண்டிருக்கும் நூல்
“புறநானூறு’
4. சங்ககாலத்து அரசர்களின் ஆட்சி முறையை விளக்கும் நூல்
“புறநானூறு”
5. மக்களின் வாழ்க்கை நிலை குறித்து தகவல்கள் மிகுதியாகக் கூறும் நூல்
“புறநானூறு”
6. பண்டைய கால தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவும் நூல்
“புறநானூறு”
7. புறநானூறு பிரித்து எழுதுக
“புறம் + நான்கு + நூறு”
8. புற வாழ்வின் பெருமைகளை நாம் உணர பெரிதும் துணைபுரியும் நூல்
“புறநானூறு”
9. புறநானூற்றை பாடிய புலவர்களின் எண்ணிக்கை
“150 க்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்பட்டது”
“ 4 அடிச் சிற்றெல்லையும் 40அடி பேரெல்லையும்’
11. புறநானூறு ஒரு
“புறப்பொருள் நூலாகும்”
12. புறநானூறு பாடல்களின் எண்ணிக்கை
“400″
13. புறநானூறு தொகுத்தவர்
“யார் என தெரியவில்லை”
14. புறநானூறு தொகுப்பித்தவர்
“யார் என தெரியவில்லை”
15. புறநானூற்றில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
“பாரதம் பாடிய பெருந்தேவனார்”
16. புறநானூற்றில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்
“சிவபெருமான்”
17. புறநானூற்றின் வேறு பெயர்கள்
“புறம்”
“புறப்பாட்டு’
“புறம்பு நானூறு”
“தமிழர் வரலாற்றுப் பெட்டகம்”
“தமிழ் களஞ்சியம்”
“தமிழ் கருவூலம்”
“திருக்குறளின் முன்னோடி”
18. புறநானூற்றில் கூறப்படாத புறப்பொருள் திணை பெயர்
“உழிஞைத் திணை”
19. புறநானூற்றை முதலில் பதிப்பித்தவர்
“தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்”