Categories
Uncategorized

திருமுருகாற்றுப்படை நூல் விளக்கம்

பன்னிருதிருமுறை பகுப்பில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கும் தொகைநூல்

   “திருமுருகாற்றுப்படை”
 
பத்து பாட்டுக்கு கடவுள் வாழ்த்து போல் அமைந்திருக்கும் நூல்
    “திருமுருகாற்றுப்படை”
 
முருகன் கடவுளின் அறுபடை வீடு குறித்து எடுத்துரைக்கும் நூல் 
     “திருமுருகாற்றுப்படை’
 
பத்துப்பாட்டு நூல்களுள் காலத்தால் பிந்தியதாகக் கருதப்படும் நூல்
    “திருமுருகாற்றுப்படை”
 

திருமுருகாற்றுப்படை பிரித்து எழுதுக

 திருமுருகு + ஆற்றுப்படை”
 
முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவரைப்பற்றி முழுமையான செய்திகளை கூறும் நூல்
   திருமுருகாற்றுப்படை”
 
திருமுருகாற்றுப்படை பாடலாசிரியர்
  மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரர்’
 
திருமுருகாற்றுப்படை அடிவரையரை
   “317″
 
திருமுருகாற்றுப்படை ஒரு
    புறப்பொருள் நூலாகும்”
 
திருமுருகாற்றுப்படையின் பாவகை
    ஆசிரியப்பா”
 
திருமுருகனின் அருளைப்பற ஆற்று படுத்துகின்ற ஒரு ஆற்றுப்படை நூல்
   திருமுருகாற்றுப்படை’
 
ஆற்றுப்படை என்பதன் பொருள்
 வழிப்படுத்தல்”
  “வழிகாட்டுதல்”
 
திருமுருகாற்றுப்படை விளக்கம்:
  பரிசு பெற்ற ஒருவர் தன்னைப்போல் பரிசு பெறப் போகும் மற்றவரை தன்னைப்போல் பயனடைய வேண்டி தான் பரிசு பெற்ற வள்ளல் இடமோ   அரசரிடமோ வழிபடுவதே ஆற்றுப்படை ஆகும்.
 ஆனால் திருமுருகாற்றுப் படையின் சிறப்பு வீடுபேறு பெறுவதற்கு பக்குவமடைந்த ஒருவனை வீடுபேறு பெற்ற ஒருவன் வழி நடத்துவதாக அமைந்திருப்பது . 
அதுமட்டுமன்றி ஆற்றுப்படை நூல்கள் எல்லாம் பரிசில் பெற செல்வோரால் பெயர்பெறும்.
அம் முறைக்கு மாறாக பரிசில் கொடுப்போரால் பெயர் பெற்றது திருமுருகாற்றுப்படை.
 
இதில் குறிப்பிடப்படும் முருகப்பெருமானின் “அறுபடை வீடுகள்”பின்வருமாறு:
 

   

“திருப்பரங்குன்றம்

     “திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
    “திருவாவினன்குடி (பழனி)
    “திருவேரகம் (சுவாமிமலை)
    “குன்றுதோறாடல் (திருத்தணி)
    “பழமுதிர்ச்சோலை”
 
திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்கள்
         “முருகு”
         “புலவராற்றுப்படை”
 
திருமுருகாற்றுப்படையை முதலில் பதிப்பித்தவர்
         “சரவணப் பெருமாள் ஐயர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *