1. எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாக பாடப்பெறும் நூல்
“ஐங்குறுநூறு”
2. ஐங்குறுநூறு தொகுத்தவர்
“புலத்துறைமுற்றியகூடலூர்கிழார்”
3. ஐங்குறுநூறு தொகுப்பித்தவர்
“யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை”
4. தொகை நூல்களில் மிகுதியான செய்யுளை பெற்றிருக்கும் நூல்
“ஐங்குறுநூறு”
5. தொகை நூலில் மருதத் திணையை முதலாவதாக கொண்டு பாடப்பெறும் நூல்
“ஐங்குறுநூறு”
6. தொகை நூல்களுள் அடி அளவால் மிகவும் குறைந்த பாடல்களைக் கொண்ட நூல்
“ஐங்குறுநூறு”
7. ஐங்குறுநூறு பிரித்து எழுதுக
“ஐந்து + குறுமை +நூறு “
8. ஐங்குறுநூறு வில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
“500″
9. ஐங்குறுநூறு பாடிய புலவர்களின் எண்ணிக்கை
“5″
10. ஐங்குறுநூறு அடிகள்
“3 அடி சிற்றெல்லையும் –
“6 அடி பேரெல்லையும்”
11. ஐங்குறுநூறு ஒரு
“அகப்பொருள் நூல்”
12. ஐங்குறுநூறு வில் உள்ள அகப்பொருள் திணைகள் எண்ணிக்கை
“5″
13. ஐங்குறுநூறு வில் உள்ள அகப்பொருள் திணைகள் யாவை
“குறிஞ்சி – கபிலர்
“முல்லை – பேயனார்
“மருதம் – ஓரம்போகியார்
“நெய்தல் – அம்மூவனார்
‘பாலை – ஓதலாந்தையார்…
14. புலவர்களையும் அவர்கள் பாடிய திணைகளையும் பற்றி பாடும் ஓர் அழகிய பழம்பாடல்
“மருதம்ஓ ரம்போகி நெய்தல்அம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் – கருதிய
பாலைஓ தலாந்தை பனிமுல்லை பெயனே
நூலைஓ துஐங்குறு நூறு”
15.“சிவபெருமான்”கடவுள் வாழ்த்தாக பாடப்பெறும் நூல்
“ஐங்குறுநூறு”
16. ஐங்குறுநூறு முதலில் பதிப்பித்தவர்
“தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்”
17. இந்நூலில் அமையும் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
“பாரதம் பாடிய பெருந்தேவனார்”
18. இந்நூலுக்கு முதலில் உரை எழுதியவர்
“ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை”