1. அலெக்ஸாண்டரின் படை எடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி கூறும் சிறப்பு வாய்ந்த நூல்
“அகநானூறு”
2. பழங்கால தமிழர்களின் திருமண விழா நடை முறையை விளக்கும் ஒரே தொகை நூல்
“அகநானூறு”
3. கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட “குடவோலை முறை தேர்தல்“விளக்கும் சிறப்பு வாய்ந்த தொகைநூல்
“அகநானூறு”
4. சங்க இலக்கியங்களுள் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் ஒரே நூல்
“அகநானூறு”
5. அகநானூறு பாடிய புலவர்களின் எண்ணிக்கை
“145”
6. அகநானூறு அடிவரையரை
“13 அடி சிற்றெல்லை-
“31 அடி பேரெல்லை”
7. அகநானூறு ஒரு
“அகப்பொருள் நூல் ஆகும்”
8. அகநானூறு பாடல்களின் எண்ணிக்கை
“400″மற்றும் கடவுள் வாழ்த்துடன் மொத்தம் 401 பாடல்”
9. அகநானூற்றின் மூவகைப் பகுப்பு பாடல்கள்
“களிற்றியானைநிறை (1-120)
“120 பாடல்கள்”
“மணிமிடை பவளம் (121-300)
“180 பாடல்கள்’
“நித்திலக் கோவை (301-400)
“100 பாடல்கள்”
10. அகநானூற்றின் திணை வைப்புமுறை
“பாலைத் திணை – 1,3,5,7,9 என முடியும் 200 பாடல்கள்”
“முல்லைத்திணை – 4 என முடியும் 40 பாடல்கள்”
“மருதத்திணை – 6 என முடியும் 40 பாடல்கள்”
“நெய்தல் திணை – 0 என முடியும் 40 பாடல்கள்”
“குறிஞ்சித்திணை – 2,8 என முடியும் 80 பாடல்கள் ஆகும்”
“மதுரை உப்புரிகுடிகிளார் மகனார் உருத்திரசன்மன்’
12. அகநானூற்றை தொகுப்பித்தவர்
“பாண்டியன் உக்கிரப் பெருவழுதி”
13. அகநானூற்றில் இடம்பெறும் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்
“பாரதம் பாடிய பெருந்தேவனார்”
14. அகநானூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடலில் குறிப்பிடப்படும் கடவுள்
“சிவபெருமான்”
15. அகநானூற்றின் வேறு பெயர்கள்
“அகம்”
“அகப்பாட்டு”
“நெடுந்தொகை’
“நெடுந்தொகை நானூறு”
“நெடும் பாட்டு”
‘பெருந்தொகை நானூறு”
16. அகநானூறுவிற்கு முதலில் உரை எழுதியவர்கள்
“நாவலர் நா. மு. வெங்கடசாமி நாட்டார் மற்றும் கரந்தைக் கவியரசு இரா. வெங்கடாசலம்பிள்ளை.”
17. அகநானூற்றை முதலில் பதிப்பித்தவர்
“கம்பர் விலாசம் வே. ராஜகோபால அய்யங்கார்.”